உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவும் மழையும்.... மறக்குமா நெஞ்சம் ரக நிகழ்வுகள்

உலகக்கோப்பை இறுதி போட்டியில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், இதற்குமுன் மழையால் தென்னாப்பிரிக்கா அணி எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி
தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணிpt web

உலகின் திறமை வாய்ந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா 1990-ஆம் ஆண்டு முதல் பார்க்கப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை எப்போது நடைபெற்றாலும் இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அரை இறுதிக்கு மேல் அந்த அணியால் முன்னேற முடியாமல் போனதே வரலாறாக இருந்தது. ஆனால் இம்முறை முதல் முறையாக தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாக் அவுட் போட்டி என்றால் தென்னாப்பிரிக்கா தோல்வி அடையும் என எப்படி பார்க்கப்படுகிறதோ அதேபோல்தான் நாக் அவுட் போட்டிகளில் மழை பாதிப்பு ஏற்பட்டால் அதுவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது.

1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தான் முதல் முறையாக உலகக்கோப்பை தொடருக்கு வந்தது தென்னாப்பிரிக்கா. முதல் உலகக் கோப்பையிலே அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது அந்த அணி. அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய போது 13 பந்துக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. அதன் பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது ரிச்சி பெனாய்ட் விதிமுறைப்படி ஒரு பந்துக்கு 21 ரன்கள் எடுக்க வேண்டும் என விதிமுறை மாற்றியதில், அரை இறுதியில் தோல்வியை சந்தித்தது தென் ஆப்ரிக்கா.

தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி
INDvSA | டி20 உலகக் கோப்பை சாம்பியன் யார்... தென்னாப்பிரிக்காவோடு பலப்பரிட்சை நடத்தும் இந்தியா..!

இதேபோன்று 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா செல்லலாம் என்ற நிலை இருந்தது. தென்னாபிரிக்க அணி 45 ஓவர்களில் 229 ரன்கள் அடிக்க வேண்டும் என முதலில் கூறப்பட்டது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டியின் முடிவு கணிக்கப்பட்டது. அதில் தென்னாப்பிரிக்கா ஒரு ரன் பின் தங்கி இருக்க, ஆட்டம் சமனில் முடிந்தது. தொடரில் இருந்து வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

இதுபோன்று 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை மாற்றியது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்படி மழை எப்போதெல்லாம் முக்கிய போட்டிகளில் பெய்துள்ளதோ அப்போதெல்லாம் அது தென்னாப்பிரிக்காஅணிக்கு எதிராகவே முடிந்துள்ளது.

இன்றைய இறுதிப்போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அது எந்த மாதிரி தாக்கத்தை தென்னாப்பிரிக்க அணிக்கு கொடுக்கப்

போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி
இந்தியா vs தென்னாப்ரிக்கா: இரு அணிகளும் கடந்து வந்த பாதை.. பலம், பலவீனம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com