இந்தியா vs தென்னாப்ரிக்கா: இரு அணிகளும் கடந்து வந்த பாதை.. பலம், பலவீனம் என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் முன்னேறியுள்ளன. இவைகள் கடந்த வந்த பாதை, நடப்பு தொடரில் இரு அணிகளின் பலம் பலவீனம் குறித்து தற்போது பார்ப்போம்...
இந்தியா vs தென்னாப்ரிக்கா
இந்தியா vs தென்னாப்ரிக்காpt web

வரலாறு படைத்த தென்னாப்ரிக்கா

மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸ் நகரில் சனிக்கிழமை நடைபெறுகிறது டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி. தென்னாப்ரிக்கா மற்றும் இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன.

புதிய வரலாறு படைத்துள்ள தென்னாப்ரிக்கா குரூப் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்றிருந்தது. தனது முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட தென்னாப்ரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகளுடன் போராடி வெற்றியைப் பதிவு செய்தது.

சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இப்போட்டிகளிலும் தடுமாற்றத்துடனே தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களில் சுருட்டிய தென்னாப்ரிக்கா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியது.

இந்தியா vs தென்னாப்ரிக்கா
"கோலி தன்னுடைய பெஸ்ட்டை ஃபைனலுக்கு சேமித்து வைத்திருக்கலாம்" - ரோஹித் ஷர்மா

முதல்முறை இறுதிப் போட்டி

தென்னாப்ரிக்கா அணி, டிகாக், மார்க்ரம், கிளாசன், மில்லர் என்ற சிறப்பான மட்டையாளர்கள் மற்றும் ரபாடா, மகாராஜ், நோர்க்யா என சிறப்பான பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்தாலும், நடப்புத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் தடுமாற்றத்துடனே விளையாடி வெற்றி பெற்றது. நாக் அவுட் என்றாலே அவுட்டாகி செல்லும் அந்த அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது தென்னாப்ரிக்க வீரர்களுக்கு ஓர் உத்வேகமாக உள்ளது.

அதேநேரத்தில், மற்றொரு இறுதிப் போட்டியாளரான இந்தியா குரூப் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தபோது, முதல் போட்டிகளில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. கனடாவுடனான போட்டி மழையால் ரத்தானது.

இந்தியா vs தென்னாப்ரிக்கா
”இந்தியாவுக்கு சாதகமாக மைதானமா? உங்க முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்” - மைக்கல் வாகனை விளாசிய ஹர்பஜன்!

மூன்றாவது முறை இறுதிப் போட்டியில் இந்தியா

சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. அரையிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா, மழை குறுக்கிட்ட போதும் சிறப்பான சுழல் பந்து வீச்சால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி 3 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் (FORM) சற்று கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. அதேபோல், மிடில் ஆர்டர்களில் அதிரடியாக ரன்குவிக்க இந்தியா சற்று தடுமாறுகிறது. மற்றபடி ரோகித் சர்மாவின் சிறப்பான பேட்டிங் பலமாக உள்ளது.

ரிஷப், சூர்யகுமார் பொறுப்புடன் விளையாடி வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. அதேபோல் பந்து வீச்சில் பும்ரா, அக்ஸர், குல்தீப் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். ஹர்திக் பாண்டியாவும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவுகிறார்.

இந்தியா vs தென்னாப்ரிக்கா
டிரம்ப் vs பைடன்; அனல் பறந்த நேரடி விவாதம்... குற்றச்சாட்டுகளும் பதில்களும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com