10 வருடத்திற்கு பிறகு அரையிறுதிக்குள் காலடி வைத்த SA.. சொந்த மண்ணில் தொடரிலிருந்து வெளியேறிய WI!

இரண்டு முறை டி20 உலகக்கோப்பை வென்ற சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸை தொடரிலிந்து வெளியேற்றியுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
sa va wi
sa va wicricinfo

2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் ஒரு கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், அதில் எந்த 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லப்போகிறது என்ற நிலையை எட்டியுள்ளது.

குரூப் 2 பிரிவிலிருந்து முதல் அணியாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது அணி எது என்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

sa va wi
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

பந்துவீச்சில் மிரட்டிய தென்னாப்பிரிக்கா!

முக்கியமான போட்டியில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்த தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம், பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறந்த கேப்டன்சியை வெளிப்படுத்தினார். முதல் ஓவரிலேயே கடந்த போட்டியில் மிரட்டிய சாய் ஹோப்பை மார்கோ யான்சன் வெளியேற்ற, அதற்குபிறகு பந்துவீச வந்த கேப்டன் மார்க்ரம் சிறந்த ஃபார்மில் ஜொலித்துவரும் நிக்கோலஸ் பூரனை 1 ரன்னில் வெளியேற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

shamsi
shamsi

அதற்கு பிறகு ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக செயல்படுவதை புரிந்துகொண்ட மார்க்ரம், தங்களுடைய மெயின் பவுலரான ரபாடாவுக்கு கூட 2 ஓவர்களை மட்டுமே கொடுத்து, மெயின் பவுலராக லெக் ஸ்பின்னர் ஷம்சியை களமிறக்கினார். அபாரமாக பந்துவீசிய ஷம்சி சிறப்பாக பேட்டிங் செய்துகொண்டிருந்த கைல் மேயர்ஸை 35 ரன்னிலும், அரைசதமடித்து தொல்லையாக இருந்த ரோஸ்டன் சேஸை 52 ரன்னில் வெளியேற்றியதுடன் மட்டுமில்லாமல், அதிரடிவீரர் ஷெர்பன் ரூதர்ஃபோர்டை 0 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

roston chase
roston chase

ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஷம்சி, மஹாராஜ், மார்க்ரம் மூன்று முழு ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

sa va wi
“அடுத்த போட்டியில் நாங்கள் வென்று செமிபைனல் செல்ல இந்தியாதான் சரியான அணி”! எச்சரித்த AUS கேப்டன்!

இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் டிஃபண்ட் செய்யுமளவு போதுமான ரன்களை பேட்டர்கள் கொடுக்கவில்லை என்றாலும், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விண்டீஸ் பவுலர்கள் போராடினர். பேட்டிங்கில் அரைசதமடித்த ஜோஸ் பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார், ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்துவீச்சில் தன்னுடைய ஐபிஎல் ஃபார்மை பிரதிபலித்து 2 விக்கெட்டை தட்டிச்சென்றார்.

Roston Chase
Roston Chase

93 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற, போச்சுடா எப்பவும் போல இந்த டி20உலககோப்பையிலும் சோக் பன்னபோறாங்க என்ற எண்ணமே எல்லோருக்கும் தோன்றியது. ஸ்டப்ஸ் மற்றும் க்ளாசன் இருவரும் போதுமான ரன்களை அடித்து வெளியேறினாலும், முக்கியமான கட்டத்தில் களத்தில் நிற்கவேண்டிய மில்லர் போல்டாகி வெளியேறினார்.

16 பந்துகளுக்கு 16 ரன்கள் என போட்டி மாற அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி மேலும் தங்களை அழுத்தத்தில் போட்டது. ஆனால் முக்கியமான் நேரத்தில் ஒரு பவுண்டரி, சிக்சர் என அடித்த யான்சன் தென்னாப்பிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இதன்மூலம் தொடர்லிருந்தே வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அனைத்தும் இருந்தும் எதற்காக ஷிம்ரன் ஹெட்மயரை அணிக்குள் எடுத்துவர வில்லை, எதற்காக ஜோஸ்ஸுக்கு 4வது ஓவரை கொடுக்கவில்லை என்ற காரணங்களுக்கு கேப்டன் ரோவ்மன் பவல் தான் பதில் கூறவேண்டும்.

sa va wi
"ஹர்திக் பாண்டியா முன்னாள் பாகிஸ்தான் வீரரை போல விளையாடுகிறார்" -சர்ப்ரைஸாக ஒப்பிட்ட முன்.IND வீரர்!

10 வருடத்திற்கு பிறகு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா!

கடந்த 2014 டி20 உலகக்கோப்பையின் போது அரையிறுதியில் கால்பதித்த தென்னாப்பிரிக்கா அணி, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக டி20 உலகக்கோப்பைக்குள் காலடி எடுத்துவைத்துள்ளது.

தொடக்க வீரர்கள் சோபிக்காமல் இருந்துவந்த நிலையில், தற்போது டிகாக் ஃபார்மிற்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது. மிடில் ஆர்டரில் ஸ்டப்ஸ் மற்றும் க்ளாசன் இருவரும் சிறப்பாக செயல்படும் வேளையில், கேப்டன் மார்க்ரம் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் 2024 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா தங்களுடைய முதல் டி20 உலகக்கோப்பை பைனலை நிச்சயம் விளையாடும்.

sa va wi
‘இதனால்தான் கோலியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை’ - முக்கியமான காரணத்தை பகிர்ந்த முன்னாள் வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com