"ஹர்திக் பாண்டியா முன்னாள் பாகிஸ்தான் வீரரை போல விளையாடுகிறார்" -சர்ப்ரைஸாக ஒப்பிட்ட முன்.IND வீரர்!

பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் கலக்கிவரும் ஹர்திக் பாண்டியா முன்னாள் பாகிஸ்தான் வீரரை போல விளையாடுவதாக முன்னாள் இந்திய வீரர் குறிப்பிட்டுள்ளார்.
hardik pandya
hardik pandyaweb

2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் பிரச்னை, ரசிகர்களின் வெறுப்பு, மனைவியுடன் கருத்து வேறுபாடு என கடினமான சூழல்களை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா, எதையும் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

hardik pandya
hardik pandyax

வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் அரைசதமடித்த ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். சூப்பர் 8 சுற்றில் தோல்வியே காணாத இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

hardik pandya
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

அந்த பாகிஸ்தான் வீரரை போல விளையாடுகிறார்..

நடப்பு உலகக்கோப்பையில் பேட்டிங்கில் நிதானமாக விளையாடும் ஹர்திக், பந்துவீச்சிலும் பேட்ஸ்மேன்களின் மைண்டோடும், கால்களோடும் விளையாடுகிறார். அவர் பேட்ஸ்மேனின் அறிவோடு விளையாடி வேகப்பந்து மற்றும் மந்தமான பந்து என வேரியேசன்களில் கலக்கி வருகிறார்.

hardik pandya
hardik pandya

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் பிரியன்ஸை பார்த்த முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்டியாவை முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக்குடன் ஒப்பிட்டு பேசினார்.

abdul razzaq
abdul razzaq

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் குறித்து பேசிய அம்பத்தி ராயுடு, “ஹர்திக் பாண்டியா முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக்கை நினைவுபடுத்துகிறார். இவர் அவரை போலவே பந்துவீசுகிறார். பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டரைப் போலவே பந்துவீச்சு பாணியை வைத்திருக்கும் ஹர்திக் பாண்டியா, பேட்ஸ்மேன்களுக்கு இடம் கொடுக்காமல் பந்துவீசுவதோடு, அடிக்கடி வேகத்தில் மாற்றம் செய்து அவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறியுள்ளார்.

hardik pandya
hardik pandya

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 13.75 சராசரி மற்றும் 6.47 என்ற எகானமியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல பேட்டிங்கில் 44.50 சராசரி மற்றும் 141.26 ஸ்ட்ரைக் ரேட் உடன் 89 ரன்கள் குவித்துள்ளார்.

hardik pandya
ஹர்திக் பாண்டியாவின் கடைசிநேர மிரட்டலால் இந்தியா ரன் குவிப்பு! குல்தீப் சுழலில் வீழ்ந்தது வங்கதேசம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com