ENG vs SA | தென்னாப்பிரிக்காவுக்கு முதல் தோல்வியைப் பரிசளிக்குமா இங்கிலாந்து!

டி20 உலகக் கோப்பையில் இன்றைய இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் என்ன நடக்கலாம்? இன்றைய போட்டியில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்? விரிவாக பார்ப்போம்...
eng vs sa
eng vs saweb

போட்டி எண் 45 (சூப்பர் 8): இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா

மைதானம்: டேரன் சம்மி நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், கிராஸ் ஐலட், செயின்ட் லூசியா

போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 21, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

இங்கிலாந்து: போட்டிகள் - 5, வெற்றிகள் - 3, தோல்வி - 1, முடிவு இல்லை - 1

சிறந்த பேட்ஸ்மேன்: ஃபில் சால்ட் - 4 போட்டிகளில் 147 ரன்கள்

சிறந்த பௌலர்: ஜோஃப்ரா ஆர்ச்சர் - 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள்

இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட இத்தொடரிலிருந்து வெளியேறும் சூழ்நிலையில் இருந்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான அந்த அணியின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றது அந்த அணி. 2 போட்டிகளில் 1 புள்ளி மட்டுமே பெற்றிருந்த நிலையில், ஸ்காட்லாந்து சிறப்பாக ஆடி வெற்றிகள் பெறத் தொடங்கியது.

இருந்தாலும் கடைசி 2 லீக் போட்டிகளில் ஓமனையும், நமீபியாவையும் பந்தாடி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது நடப்பு சாம்பியன். சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் போட்டியை நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் எளிதாக வெற்றி பெற்றது இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸ் 180 ரன்கள் அடிக்க, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 17.3 ஓவரிலேயே இலக்கை சேஸ் செய்தது பட்லர் அண்ட் கோ.

eng
eng

தென்னாப்பிரிக்கா: போட்டிகள் - 5, வெற்றிகள் - 5, தோல்வி - 0, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 5 போட்டிகளில் 122 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆன்ரிக் நார்கியா - 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்

இதுவரை விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் வென்று அசத்திக்கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. இலங்கை அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை தொடங்கியவர்கள், அதன்பிறகு நெதர்லாந்து, வங்கதேசம், நேபாள அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி குரூப் சுற்றை முடித்தது. சூப்பர் 8 சுற்றில் தங்கள் முதல் போட்டியில் அமெரிக்காவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5க்கு 5 பதிவு செய்திருக்கிறது அந்த அணி.

SA vs BAN
SA vs BANpt desk

என்னதான் 5 போட்டிகளை வென்றிருந்தாலும் ஏதோவொரு கட்டத்தில் அந்த அணி ஆட்டத்தில் தங்கள் பிடியை இழந்திருக்கிறது. நெதர்லாந்து, நேபாளம் போட்டிகளில் போராடி வென்றிருந்த அந்த அணி, அமெரிக்காவுக்கு எதிராகவும் கூட கடைசி கட்டத்தில் ரன்களை விட்டது.

eng vs sa
இது அதுல்ல.. அதே ஷாட்.. அதே வைப்! விராட் கோலியின் சிக்சரை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்! #viral

இந்தப் போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம்

இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. இந்தப் பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்க என 3 பெரிய அணிகள் இருப்பதால், அரையிறுதிக்கு தகுதி பெற டாப் 2 இடங்களுக்குள் முடிப்பது எளிதான காரியமாக இருக்காது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இந்தப் போட்டியை வென்றால், அவர்கள் அரையிறுதியில் ஒரு காலை வைத்துவிடுவார்கள். அந்த அணியின் நன்றாக கிளிக் ஆகிக்கொண்டிருக்கிறது. பட்லர் மட்டும் இன்னும் தன் முழு வீச்சோடு விளையாடத் தொடங்கவில்லை. அந்த அணியின் பௌலிங்கும் நன்றாகவே இருக்கிறது. அதனால் அவர்கள் பெரிதாக வருந்தத் தேவையில்லை.

eng vs sa
eng vs sa

அதேசமயம் தென்னாப்பிரிக்க அணிக்கு ஒருசில சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. ஓப்பனர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 5 இன்னிங்ஸ்களில் 61 ரன்களே அடித்திருக்கிறார். கேப்டன் மார்க்ரம் 77 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இப்படி அவர்களின் டாப் ஆர்டர் தொடர்ந்து தடுமாறுகிறது. அதை சரிசெய்யாமல் போனால், இங்கிலாந்து அங்கேயே பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். இதுவரை பயன்படுத்தாமல் இருக்கும் ரயான் ரிக்கில்டனை இந்தப் போட்டியிலாவது அவர்கள் களமிறக்கவேண்டும்.

eng vs sa
தோனியின் வெளியேற்றம் உறுதி? தலைவன் வழியில் "கேப்டன்சி + விக்கெட் கீப்பிங்” செய்யும் ருதுராஜ்! #viral

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

இங்கிலாந்து: ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், ஹேரி ப்ரூக், சாம் கரண், ஜோஃரா ஆர்ச்சர், மார்க் வுட், ரீஸ் டாப்லி, அதில் ரஷீத்.

eng
engpt web

தென்னாப்பிரிக்கா: ரயான் ரிக்கில்டன், குவின் டி காக் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், எய்ன்ரிக் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், கேஷவ் மஹாராஜா, தப்ராய்ஸ் ஷம்ஸி, ககிஸோ ரபாடா, எய்ன்ரிக் நார்கியா.

eng vs sa
’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!

கவனிக்கவேண்டிய வீரர்கள்:

இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோ: தென்னாப்பிரிக்க அணிக்கு அவர்களின் பந்துவீச்சு தான் பெரிய பலமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக மிடில் ஓவர்களில் எதிரணிகளை கதறடிக்கிறார்கள். ஜானி பேர்ஸ்டோ மட்டும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆடியதுபோல் ஆடினால், நிச்சயம் அங்கு இங்கிலாந்தின் கை ஓங்கும்.

eng vs sa
eng vs sa

தென்னாப்பிரிக்கா - குவின்டன் டி காக்: லீக் சுற்றில் தடுமாறியிருந்த டி காக், சூப்பர் 8 சுற்றை அரைசதம் அடித்துத் தொடங்கியிருக்கிறார். இங்கிலாந்தின் வுட், ஆர்ச்சர் ஆகியோருக்கு எதிராக அவரது அதிரடி பவர்பிளேவிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு பாசிடிவான தொடக்கம் கொடுக்கலாம்.

கணிப்பு: இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு முதல் தோல்வியை பரிசளிக்க வாய்ப்புகள் அதிகம்.

eng vs sa
‘இதுக்கு ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்’! WI-க்கு மரண அடி கொடுத்து வென்ற ENG!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com