rr vs rcb
rr vs rcbpt web

IPL 2024| மழையால் கைவிடப்பட்ட RR vs KKR ஆட்டம்.. எலிமினேட்டரில் பெங்களூரு அணியுடன் மோதும் ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய, நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது..
Published on

நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத இருந்தன. கவுஹாத்தியில் நடக்க இருந்த போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. வெகு நேரம் கழித்தே மழை நின்ற நிலையில், போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு அதன்பின்னரே டாஸ் போடப்பட்டது.

மழை காரணமாக யார் டாஸ் வென்றாலும் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், மீண்டும் குறுக்கிட்டது மழை. இதன் காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

rr vs rcb
“இதெல்லாம் சரியில்லங்க..” காத்திருக்க வைத்த RCB வீரர்கள்.. வெளியேறிய தோனி.. விமர்சகர்கள் சொல்வதென்ன?

இதன்பின்னர் ராஜஸ்தான் வீரர்கள் தூறலை பொருட்படுத்தாமல் தங்களது ரசிகர்களுக்கு, மைதானத்தை சுற்றிவந்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.

முன்னதாக பஞ்சாப் உடனான போட்டியில் வென்ற ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா இடையேயான போட்டி கைவிடப்பட்டதால், தொடர்ந்து ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது. இதன் மூலம் மே 21 ஆம் தேதி நடக்கும் Qualifier 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன..

இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். அதேவேளையில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி Qualifier 1ல் தோல்வி அடைந்த அணியுடன் மோதும்.

rr vs rcb
“ரெக்கார்டு செய்ய வேண்டாம்னு சொன்னதை கூடவா போடுவீங்க..” ரோகித் சர்மா வேதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com