ரிஷப் பண்ட்file
T20
டி20 உலகக்கோப்பையிலும் விளையாடுவாரா? தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பண்ட்!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவிர உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்
2022 டிசம்பர் 31 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், அப்போதில் இருந்து போட்டிகளில் களமிறங்காமல் உள்ளார். தற்போது நல்ல உடல் நலம் பெற்ற நிலையில் மெல்ல மெல்ல விளையாட்டில் தனது பங்கை அளிக்க முயற்சித்து வருகிறார்.
Rishabh Pantpt web
இதுவரை சிறிய அளவிலான உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்த அவர், தற்போது கடினமான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ரிஷப் பண்ட், நடப்பாண்டு விளையாடுவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல்.-ஐ தொடர்ந்து உலகக் கோப்பை டி20 தொடரிலும் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.