RCB vs PBKS | ‘நானும் Best Finisher தான்ப்பா’ - கெத்து காட்டிய தினேஷ் கார்த்திக்.. RCB Fans ஹேப்பி!

ஜெயிப்பாங்கலா தோப்பாங்களா என தடுமாறிக்கிட்டு இருந்த நேரத்துல தினேஷ் கார்த்திக்கும் லோம்ரோரும் அசால்ட்டா, கொஞ்சம் கூட ஜர்க்கே இல்லாம போட்டிய தட்டி தூக்கிட்டாங்க.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்டிவிட்டர்

’சிஎஸ்கேவிடம் சேப்பாக்கத்தில் ஆர்சிபி தோற்பது வழக்கம்தானப்பா’ என்பதுபோல் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில தோல்வியை பரிசாக வாங்கிட்டது ஆர்சிபி. முதல் போட்டியின் அந்த தோல்விக்குப்பின் ஆர்சிபி ரசிகை ஒருத்தங்க பேசிய வீடியோதான் அடுத்த நாள் முழுசும் வைரலாக சோஷியல் மீடியாவில் வலம் வந்துச்சு.

அதுல அந்த ரசிகை, “இன்னும் கொஞ்சம் நல்லா விளையாடியிருக்கலாம்.. பரவால்லங்க ஈ சாலா கப் நமதே.. ‘ஜெயிச்சாலும் தோத்தாலும்’ எப்பவும் ஆர்சிபிதான்” என்று க்யூட்டாக பேசியது பலரது இதயங்களை கொள்ளை கொண்டது. அதுவும் கிரிக்கெட்டின் சில டெக்னிக்கல் வார்த்தைகள பயன்படுத்தி அந்த ரசிகை பேசுன அழகே தனிதான். என்ன ஆனாலும் ஆர்சிபி-தான்னு அவ்ளோ சோல் ஃபுல்லா சொன்னாங்க. அந்த அளவுக்கு என்றும் மாறாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வச்சிருக்கவங்கதான் ஆர்சிபி டீம். தலா 5 கோப்பைகள வசப்படுத்திய சிஎஸ்கேவுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்குமே டஃப் கொடுப்பாங்க, எந்தக் கோப்பையும் வெல்லாத ஆர்சிபியின் ஃபேன்ஸ்.

csk vs rcb
csk vs rcbpt desk

உண்மையில் ரொம்ப கெத்தா கான்ஃபிடண்டா நடப்பு ஐபிஎல் தொடருக்குள் நுழஞ்ச அணின்னா அது ஆர்.சி.பிதான். ஆர்.சிபிக்கும் கோப்பைக்கும் ஒத்தே வராது என்பது போல் ஐபிஎல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அது கனவாவே இருந்து வந்துச்சு. ஆனா இந்த வருஷம், ஆர்.சி.பி அணியின் கையில ஐபிஎல் கோப்பை தவழ்ந்தது. ஆம், மகளிர் பீரிமியர் லீக் தொடரில் கோப்பையை ஆர்சிபி அணி தட்டி தூக்கி ஆர்சிபி ஃபேன்ஸ் மனசுல பால வாத்தாங்க.

தினேஷ் கார்த்திக்
16 வருட வலி! “ஈ சாலா கப் நம்தே” ட்ரோல்.. அனைத்து ரணத்தையும் தாண்டி முதல் கோப்பையை முத்தமிட்ட RCB!

பெண்கள் அணிய போல இந்த வருடம் ஆடவர் அணியும் நிச்சயம் கோப்பை வசப்படும் என லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் ஆருடம் சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, முதல் போட்டியில் அவங்களுக்கு நடந்ததெல்லாம் சோகக்கதைதான். சிஎஸ்கேவுக்கு எதிராக முதல் போட்டியில் வழக்கம் போல் தோல்வியை தழுவி சேப்பாக்கம் சோகக்கதையை தொடர்ந்தாங்க.

தினேஷ் கார்த்திக்
மூச்சுமுட்டிய சேப்பாக்கம் மைதானம்; கெத்தாக RCBயை சம்பவம் செய்த CSK! வெற்றி கணக்கை துவங்கிய ருதுராஜ்!

சரி முதல் போட்டிதானே இரண்டாவது போட்டியில பாத்துக்கலாம்னு பஞ்சாப் அணியை நேற்றைய போட்டியில் எதிர் கொண்டது ஆர்சிபி.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கி இதுவரை நடந்த 5 போட்யிலயும் சென்னை, கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணியும் அவங்களோட சொந்த மண்ணுல வெற்றிக்கொடியை நாட்டிட்டாங்க. அந்த வரிசைல பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி ஆர்சிபியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்துல நடந்துச்சு. சரி எப்படியும் ஆர்சிபி ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடும்னு பாத்தா, வழக்கம்போல போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாம நடந்து முடிஞ்சிது. வாங்க போட்டியில என்ன நடந்துச்சு முழுசா பாக்கலாம்.

RCB
RCB

டாஸ் வின் பண்ணி ஆர்சிபி முதல்ல பந்துவீச தீர்மானிக்க, பஞ்சாப் அணி முதல்ல பேட்டிங் செஞ்சாங்க. கேப்டன் ஷிகர் தவானும், பேரிஸ்டோவும். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து ரெண்டு பவுண்டரிகள பறக்கவிட ஜான்னி பேரிஸ்டோவ் மூனாவது பவுண்டரி அடிக்க ட்ரை பண்ணி கேட்ச் ஆகி நடய கட்டிட்டாரு. அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவானோட ஜோடி சேர்ந்து நிதானமா ரன் அடிச்சாரு.

ஆனா, பிரப்சிம்ரன் 25 ரன்னுல பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ல்விங்ஸ்டனும் 17 ரன்னுல கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறிட்டாரு. அரைசதம் அடிப்பாருனு பாத்தா ஷிகர் தவானும் 45 ரன்ல ஏமாத்திட்டாரு.

கடைசி நேரத்துல சாம் கர்ரன் 23, ஜிதேஷ் சர்மா 27, ஷஷாங் சிங் 21 ரன்கள் எடுக்க ஒரு வழியா பஞ்சாப் 20 ஓவர் முடிவுல 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தாங்க. ஆர்சிபி தரப்புல சிராஜ் சிறப்பா பந்துவீசி 26 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ரெண்டு விக்கெட்டையும் சாய்ச்சாரு. மேக்ஸ்வெல்லும் தன் பங்குக்கு ரெண்டு விக்கெட் எடுத்து அசத்திட்டாரு.

சரி, 177 ரன்னுதானே டார்க்கெட்டு.. அதுவும் சொந்த மைதானம் வேற எப்படியும் ஆர்பிசி சிக்கலே இல்லாம ஜெயிச்சிருவாங்க அப்படினு பார்த்தா, கடைசி ஓவர் வரைக்கு போட்டி பரபரப்பாவே போயிடுச்சு.

ஏன்னா சிஎஸ்கேவுல இருந்தவரைக்கு செக்கப் போடு போட்டுக்கிட்டு இருந்த கேப்டன் டூபிளசிஸ் 3 ரன்னுல நடய கட்டி அதிர்ச்சி கொடுத்திட்டாரு. அந்த அதிர்ச்சி ஓயரத்துக்குள்ள கேமரூன் க்ரீனுக்கும் அதே 3 ரன்னுல வந்த வேகத்துல திரும்பி போயிட்டாட்டாரு.

ஒரே ஆளா விராட் கோலி மட்டும் தனியா போராடிக்கிட்டு இருந்தாரு. முதல் ஓவருலேயே 4 பவுண்டரிகளா விளாசி தள்ளுன விராட் கோலி, விக்கெட்டுங்க ஒரு பக்கம் சரிஞ்சாலும் அதிரடி டெம்போவ அப்படியே மெயிண்டன் பண்ணிட்டு வந்தாரு. சரி கொஞ்ச நேரமாவது களத்துல இருப்பாரு பாத்தா ரஜட் பட்டிதாரும் போன 18 பந்துல 18 ரன் எடுத்து மேட்ச் மாதிரியே சொதப்பிட்டாரு.

இதோ வந்துட்டாரு ஆர்சிபியின் நம்பிக்கை நச்சத்திரம், அதிரடி மன்னன் க்ளென் மேக்ஸ்வெல்.. இனி ஆட்டத்தில் தூள் பறக்க போவுனு பாத்தா டூபிளசிஸ், க்ரீன் மாதிரியே அவரும் 3 ரன்னுல ஆர்சிபி ஃபேன்ஸ் நெஞ்சுல இடிய எறக்கிட்டு போயிட்டாரு.

Virat Kohli | RCB
Virat Kohli | RCB

‘எல்லாரும் போனாலும் எங்க விராட் கோலி கடைசி வரைக்கும் களத்துல நின்னு ஜெயிக்க வப்பாரு’ என்று விராட் கோலிய நம்பிக்கிட்டு இருந்தாங்க ஆர்சிபி ஃபேன்ஸ். ஆனா நெஞ்சுல கடப்பாற பாய்ஞ்ச மாதிரி 77 ரன் எடுத்திருந்தப்ப அவரும் கேட்ச் கொடுத்து சோகத்தோடு விடை கொடுத்துட்டாரு. 11 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி நம்பிக்கை கொடுத்த விராட் கோலி அவுட் ஆனதும் இனி ஆர்சிபி அவ்ளோதான் என்று எல்லாரும் நெனச்சாங்க. அவங்க நெனச்சதுக்கு ஏத்தமாதிரி அனுஜ் ராவத் 11 ரன்னுல பின்னாடியே நடைய கட்டிட்டாரு. 1

6.2 ஓவருல ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்திருந்துச்சு. அப்போ 22 பாலுக்கு 47 ரன்னு எடுக்க வேண்டியிருந்துச்சு. அட போங்கடா... ரெண்டாவது போட்டியும் தோல்விதானா என ரசிகர்கள் கொஞ்சம் சோகமாயிட்டாங்க.

தினேஷ் கார்த்திக்
’இன்று RCB தோற்றால் நாளை CSK ஜெர்ஸி அணிவேன்’ - ஏபி டிவில்லியர்ஸ் சவால்

ஆனாலும் தினேஷ் கார்த்திக் ஏதாச்சும் செய்வாருன்னு நம்பிக்க வச்சிருந்தாங்க. அவங்க நெனச்ச மாதிரியே தினேஷ் கார்த்திக்கும், லோம்ரோரும் ஆட்டத்தை அப்படியே திருப்பி கொண்டாந்தாங்க. அதனால 17 ஆவது ஓவருல ரெண்டு பவுண்டரி, 18 ஆவது ஓவருல ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், அதேமாதிரி 19 ஆவது ஓவருலயும் ஒரு பவுண்டரி, ஒருசிக்ஸர் என அப்படியே அல்வா மாதிரி ஆட்டம் ஆர்சிபி பக்கம் நழுவிடுச்சு. கடைசி ஓவருல 10 ரன் தேவை. ஆனாலும் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போயிட்டாங்க.

எல்லாத்தையும் ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் பாத்துக்குவாரு என்ற முடிவுக்கு வந்துட்டாங்க. மைதானத்தில் கொண்டாட்டம் களைகட்டியது. ரசிகர்களோட அந்த கொண்டாட்டத்த உச்சத்துக்கு கொண்டுட்டு போனார் தினேஷ் கார்த்திக்.

ஆமாங்க, கடைசி ஓவரின் முதல் பந்துல ரிவர்ஸ் பேக் ஷாட்டில் விளாசிய சிக்ஸரும், அடுத்த பந்துலயே ஸ்டெய்ட்டா விளாசிய பவுண்டரியும் ‘நானும் ஃபினிஷர் தான்ப்பா’ என தினேஷ் கார்த்திக் முகத்தில் அறைந்து சொன்ன மாதிரி இருந்துச்சு.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்டிவிட்டர்

ஜெயிப்பாங்கலா தோப்பாங்களா என தடுமாறிக்கிட்டு இருந்த நேரத்துல தினேஷ் கார்த்திக்கும் லோம்ரோரும் அசால்ட்டா கொஞ்சம் கூட ஜர்க்கே இல்லாம போட்டிய தட்டி தூக்கிட்டாங்க. தினேஷ் கார்த்திக் 10 பந்துலயே 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 28 ரன்கள் விளாசி கெத்து காட்டிட்டாரு. லோம்லோரும் 8 பந்துல 17 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணையா நின்னாரு.

ரசிகர்கள் ஆர்.சி.பி-யின் முதல் வெற்றியை ஜோராக கொண்டாடுனாங்க. அது சரி, ரசிகர்கள சொல்லவா வேணும்...? ஆர்.சி.பி ஜெயிக்கரதே அவங்களுக்கு பெரிய கொண்டாட்டம்தான். மீண்டும் ஒரு முற ஆட்டநாயகனா ஜொலித்தார் விராட் கோலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com