சக வீரரை தரக்குறைவாக திட்டினார்களா அஸ்வின், சஞ்சு? ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோவால் புதிய சர்ச்சை!

குஜராத் அணிக்கு எதிராக, சக அணி வீரர் ஒருவரை, அஸ்வின் தரக்குறைவாகப் பேசியதாக ஸ்டம்ப் மைக்கில் ஆடியோ பதிவாகி உள்ளது.
அஸ்வின், சஞ்சு சாம்சன்
அஸ்வின், சஞ்சு சாம்சன்ட்விட்டர்

10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், இதுவரை (ஏப்ரல் 11) 25 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தாம் மோதிய 5 போட்டிகளில் 4இல் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக, இந்த அணி, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணி முதல்முறையாக தோல்வியைச் சந்திப்பதற்கு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சும் ஒரு காரணமாக விமர்சிக்கப்பட்டது.

காரணம் இந்த ஆட்டத்தில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்கூட எடுக்காமல் 40 ரன்களை விட்டுக் கொடுத்தார். குறிப்பாக, அவர் வீசிய 17வது ஓவரில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி உட்பட 17 ரன்கள் எடுக்கப்பட்டது. அவர் கசியவிட்ட இந்த ரன்கள், குஜராத்தின் அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது. தவிர, இந்தப் போட்டியின்போது, அஸ்வின் சக அணி வீரர் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

அஸ்வின், சஞ்சு சாம்சன்
அம்பயருடன் கத்திய பாண்டிங் - கங்குலி.. பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி! அஸ்வின் அதிரடியால் RR வெற்றி!

முன்னதாக இந்தப் போட்டியின்போது 17வது ஓவரை வீசிய அஸ்வின், அப்போது ஃபீல்டிங்கில் சில மாற்றங்களைச் செய்தார். அதாவது, ஷார்ட் தேர்ட்மேன் திசையில் நின்றிருந்த ஃபீல்டரைப் பின்னால் செல்ல சொல்வதற்காக சஞ்சு சாம்சனிடம், "பின்னாடி போய் நிற்க சொல்லு.. அந்த சனியனை" என்று அஸ்வின் சொல்வதாகவும், அதற்கு சஞ்சு சாம்சன் உடனே, "பின்னாடி நில்லுடா டேய்" என்று அறிவுறுத்தியதாகவும், மைதானத்தின் ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அஸ்வின் யாரைக் குறிப்பிட்டு திட்டினார் என்பது தெரியவில்லை.

அஸ்வின் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் நன்றாக தமிழில் பேசிப் பழகி வரும் நிலையில், அஸ்வின் சக வீரரை தமிழில் திட்டி சம்பவம் ராஜஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், ராஜஸ்தான் அணியின் முக்கியமான இளம்வீரராக இருப்பவர் குல்தீப் சென். “ஒருவேளை, அஸ்வின் இவர் பெயரைச் சொல்வதற்காகக்தான் சென் என சொன்னாரோ... அந்த வார்த்தை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதோ அல்லது வேறு யாரையாவது உண்மையிலேயே ‘சனியனே’ என்று திட்டினாரா” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குல்தீப் சென்
குல்தீப் சென்

அதாவது ” ‘சென்’ என்ற பெயர்தான் ‘சென்-னை’ என்பதற்கு பதிலாக ‘சனியனே’ எனப் பொருள்படும்படி அழைக்கப்பட்டிருக்குமோ” என்கிற தொனியில் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில், இதுகுறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனோ அல்லது ரவிச்சந்திரன் அஸ்வினோ வாய் திறந்தால் மட்டும்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இதையும் படிக்க: மேற்கு வங்கம்: பாஜக எம்பியின் முத்த சர்ச்சை.. பாதிக்கப்பட்ட மாணவி பதில்!

அஸ்வின், சஞ்சு சாம்சன்
”நான் பேசின தமிழ் உங்களுக்கு பிடிச்சதா அஸ் அண்ணா”! ஜடேஜா சர்ப்ரைஸுக்கு ஜாலியா பதில் சொன்ன அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com