“RCB அணி நிர்வாகம் ஏமாற்றியது எனக்கு வருத்தம் அளிக்கிறது” - வைரலாகும் சாஹலின் பழைய வீடியோ!

“பெங்களூரு அணி என்னை ஏமாற்றியது வருத்தம் அளிக்கிறது” என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் பேசியிருந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்.சி.பி., யுகேந்திர சாஹல்
ஆர்.சி.பி., யுகேந்திர சாஹல்ட்விட்டர்

10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ரசிகர்களுக்கு தீனி போட்டு வருகிறது. வழக்கம்போல் நடப்புத் தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த காலங்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சாஹல், தற்போது ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடிய அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது திறமையை நிரூபித்தார். சாஹல் போன்ற நம்பிக்கையான வீரர்களின் திறமையால், ராஜஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

எனினும், சாஹல் ஒருகாலத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் நம்பிக்கை தூணாக விளங்கியவர். அந்த அணியின் பல வெற்றிப் போட்டிகளில் அவருடைய பங்களிப்பும் அதிகமுண்டு. இந்தச் சூழலில், இந்த வருடம் அவர் அந்த அணியால் கைவிடப்பட்டார். இதுகுறித்து அவரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். அப்போது அவர், “பெங்களூரு அணி என்னை ஏமாற்றியது வருத்தம் அளிக்கிறது” என கூறியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

ஆர்.சி.பி., யுகேந்திர சாஹல்
”சுழலில் சூறாவளி”.. சென்னை அணி வீரரின் சாதனையைத் தகர்த்த யுஸ்வேந்திர சாஹல்!

அவர்அந்த வீடியோவில், “ஆர்சிபி அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடி உள்ளேன். ஆனால் 2022 ஏலத்தில் என்னை எடுக்காததால் நான் மிகவும் கோபமடைந்தேன். அதிக வருத்தம் அடைந்தேன். முன்னதாக என்னிடம் அவர்கள் ‘உங்களை ஏலத்தில் வாங்குவோம்’ என வாக்குறுதி அளித்தனர். அதுவும் சாதாரண வாக்குறுதி அல்ல. ‘கூடுதல் பணம் கொடுத்து உங்களை வாங்குகிறோம்’ எனக் கூறியிருந்தனர். ஆனால் ஏலத்தின்போது பெங்களூரு அணி, என்னை எடுக்கவில்லை. இது என்னை மிகவும் காயப்படுத்தியது.

என்னுடைய ஐபிஎல் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. அங்கு நான் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாய்ப்பு அளித்தனர். முதல் போட்டியில் இருந்தே, விராட் கோலி என்மீது நம்பிக்கை வைத்தார். இப்படி அந்த அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடினேன். இருந்தும்கூட அந்த அணி என்னை ஏலத்தில் எடுக்காதது வருத்தம் தருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

பெங்களூரு அணி தொடர்ந்து தோல்வியடைந்தும், சாஹல் தற்போது உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து வெற்றியடைந்தும் வரும் நிலையில், சாஹலின் பழைய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது!

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

ஆர்.சி.பி., யுகேந்திர சாஹல்
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com