MIvRR | இதுவரை இல்லாத மோசமான கேப்டன்.. அழிவை நோக்கி செல்லும் MI? 3 இமாலய சாதனைகள் படைத்த RR!

மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
RR vs MI
RR vs MIX

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பக்கமும் அடிவாங்கினாலும் 17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணி வீரர்கள் இறுதிவரை சண்டையிட்டு போராடி தோற்றுதான் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். ஆனால் முதல்முறையாக எந்தவிதமான சண்டையும் செய்யாமல் தொடக்கம் முதலே தோல்வியின் முகமாய் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தில் இருந்தது இதுவே முதல்முறை.

தோனி என்ற பெரும் கிரிக்கெட் அடித்தளம் கொண்ட சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடும் போதுகூட, கிடைக்கும் ஒரு வாய்ப்பில் போட்டியில் கம்பேக் கொடுத்து பதிலடி கொடுக்கும் மும்பை அணியைதான் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் ஒரு மோசமான பக்கத்தை சந்தித்து வருகிறது MI அணி. கேப்டன்சி மாற்றத்தால் ரசிகர்கள் காட்டும் அதீத வெறுப்பானது, ஹர்திக் பாண்டியாவின் திடமான மனதை உடைத்திருப்பது இந்த போட்டியில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.

பவுலிங், பேட்டிங், கேப்டன்சி என மூன்றிலும் சரியாக செல்லமுடியாமல், மனதளவில் ஹர்திக் பாண்டியா பெரிய போராட்டத்தையே நடத்திவருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

அனைத்து பலம் வாய்ந்த வீரர்களையும் அணியில் வைத்துக்கொண்டும் மும்பை அணியால் ஒரு சரியான 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வுசெய்ய முடியவில்லை. அவர்கள் அணிக்குள் இன்னும் பிரச்னை நீடித்துவருவது நன்றாகவே தெரிகிறது. ’எதையோ நினைத்து வந்து, எதுவாகவோ மாற நினைத்து, பின்னர் உள்ளதும் போச்சுடா கண்ணா’ என்னும் நிலைக்கே மும்பை அணி சென்று கொண்டிருக்கிறது.

RR
RR

ஆனால் அதேநேரத்தில் தொடக்க வீரர்கள், பந்துவீச்சு, மிடில் ஆர்டர், ஃபினிசிங் வீரர்கள் என அனைத்து கட்டங்களையும் டிக் செய்திருக்கும் ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக மிளிர்ந்து வருகிறது.

RR vs MI
’பந்துவீச்சில் இரட்டை சதம்..’ IPL வரலாற்றில் 200 விக்கெட்டுகள்! முதல்வீரராக யுஸ்வேந்திர சாஹல் சாதனை!

அற்புதமான பேட்டிங் ஆடிய திலக் வர்மா - வதேரா!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களின் பலம் பேட்டிங்காக இருக்கும் பட்சத்தில் எதற்காக சேஸிங் செய்யாமல் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார் என்ற கேள்விக்கு விடையே இல்லாமல் சென்று முடிந்தது போட்டி.

MI vs RR
MI vs RR

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரெண்ட் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா இருவரும், அடுத்தடுத்து ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என மும்பை அணியின் பேட்டிங் தூண்களையே தகர்த்தெறிந்தனர். 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மும்பை அணியை, 5வது வீரராக விரைவாகவே களத்திற்கு வந்த முகமது நபி 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என விரட்டி மீட்டுவர போராடினார். ஆனால் அவரை இந்தமுறை யஸ்வேந்திர சாஹல் வெளியேற்ற, 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த MI அணி நிலைகுலைந்தது.

trent boult
trent boult

இதற்கு பிறகு யார் அடிக்கப்போகிறார்கள், எப்படியும் 140 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டுவிடும் என எதிர்ப்பார்த்த போது தான், 6வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த வதேரா மற்றும் திலக் வர்மா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி கலக்கிப்போட்டனர். ஒருபுறம் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என திலக் வர்மா அதிரடியை கிளப்ப, மறுமுனையில் 24 பந்தில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என்று ருத்ரதாண்டவமே ஆடிய வதேரா 200 ஸ்டிரைக்ரேட்டில் சரவெடியாய் வெடித்துச்சிதறினார்.

வதேரா - திலக் வர்மா
வதேரா - திலக் வர்மா

6வது விக்கெட்டுக்கு 99 ரன்களை சேர்த்து அசாத்தியமான பேட்டிங்கை ஆடிய இந்த ஜோடி, 16 ஓவர்களுக்கு 151 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு அணியை எடுத்துவந்தது. ஆனால் பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான் பவுலர்கள், வதேராவை 49 ரன்னிலும், திலக் வர்மாவை 65 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டனர்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

செய்யவேண்டிய வேலையை தரமாக செய்துவிட்டு இருவரும் வெளியேற, அதற்கு பிறகு ரன்களை எடுத்துவரும் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பக்கம் இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு சொதப்பலான ஆட்டம் ஆடிய ஹர்திக் பாண்டியா 10 பந்தில் 10 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். உடன் களத்திற்கு வந்த டிம் டேவிட், கோட்ஸீ இருவரையும் சந்தீப் சர்மா வெளியேற்ற, கடைசி 4 ஓவர்களுக்கு வெறும் 28 ரன்களை மட்டுமே அடித்த மும்பை அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாத போட்டியை உயிரை கொடுத்து எடுத்துவந்த வதேரா மற்றும் திலக் வர்மாவின் போராட்டம் பயனில்லாமல் போனது.

RR vs MI
டெல்லி அணிக்கு பெரிய அடி.. பாதியிலேயே வெளியேறும் முக்கிய வீரர்! மாற்று வீரர் யார்?

சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால்!

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடப்பு ஐபிஎல்லில் பதிவுசெய்யப்பட்ட குறைவான முதல் இன்னிங்ஸ் டோட்டல் என்பதால், ராஜஸ்தான் அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் நம்பிக்கையில் களமிறங்கியது. ஒருமுனையில் சரியாக ஃபார்மில் இல்லாத ஜெய்ஸ்வாலை நிற்கவைத்துவிட்டு, பவுண்டரிகளாக விரட்டிய ஜோஸ் பட்லர் அதிரடியான தொடக்கம் கொடுத்தார்.

அடுத்தடுத்து பட்லர் 6 பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் மெதுவாக ஃபார்மிற்கு திரும்பிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியாமல் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பட்டாளம் போராடியது. எப்போதும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தும் பும்ராவிற்கு நேற்று அது கைகொடுக்காமல் போக, மற்ற பவுலர்களுக்கு சோதனை நாளாகவே மாறியது. உடன் ஃபீல்டிங்கிலும் மோசமாக செயல்பட்ட மும்பை அணி வீரர்கள், தோல்வி முகத்தோடுதான் போட்டியை எதிர்கொண்டனர்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

ஒருவழியாக மூத்தவரான சாவ்லா பட்லரை வெளியேற்ற, அதற்கு பிறகாவது போட்டிக்குள் வருவார்கள் என்று பார்த்தால் எதுவுமே மும்பை அணிக்கு சாதகமாக செல்லவில்லை. மறுமுனையில் மொரட்டு ஃபார்மிற்கு திரும்பிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என கிரவுண்டின் நாலாபுறமும் வாணவேடிக்கை காட்டி, ஐபிஎல் சதத்தை எடுத்துவந்து அசத்தினார். பும்ராவிற்கு எதிராகவெல்லாம் சிக்சரை பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் கலக்கிப்போட்டார். உடன் சஞ்சு சாம்சனும் அவருடைய பங்கிற்கு 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விரட்ட 19வது ஓவரிலேயே இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.

சந்தீப் சர்மா
சந்தீப் சர்மா

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சந்தீப் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3 இமாலய சாதனைகள் படைத்த RR!

இந்த ஒரு போட்டியில் மட்டும் பல்வேறு இமாலய சாதனைகளை RR அணி வீரர்கள் படைத்தனர்.

பவர்பிளேவில் ரோகித் சர்மாவை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 6 ஓவரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலராக மாறி சாதனை படைத்தார். 26 விக்கெட்டுகளுடன் இந்த சாதனையை தன்வசப்படுத்தினார் போல்ட்.

trent boult
trent boult

அதேபோல முகமது நபியை வெளியேற்றிய யஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலராக மாறி வரலாறு படைத்தார்.

chahal
chahal

அத்துடன் மும்பை அணிக்கு எதிராக சதமடித்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 வயதிற்குள் 2 ஐபிஎல் சதமடித்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்தார்.

Yashasvi Jaiswal
Yashasvi JaiswalTwitter

8 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றிபெற்றிருக்கும் ராஜஸ்தான் அணி, தன்னுடைய முதல் காலை அரையிறுதிக்குள் எடுத்து வைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி எப்படி தங்களுடைய அழிவின் பாதையை வெற்றியின் பாதையாக மாற்றப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

RR vs MI
29 முறை! இறுதியாக வந்து மரணபயம் காட்டிய கரன் சர்மா.. 1 ரன்னில் RCB பரிதாப தோல்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com