தொடர்ச்சியா 4 தோல்வி.. RR-ன் 16 வருட கோப்பை கனவு நிறைவேறுமா? SRH (or) CSK யாருக்கு 2-ம் இடம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
RR vs PBKS
RR vs PBKScricinfo

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை தட்டிச்சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதற்கு பிறகு 16 வருடங்களாக கோப்பை வெல்லும் கனவை தோள்மீது சுமந்துவருகிறது.

அதற்கடுத்த பல சீசன்களில் நல்ல அணியாக தெரிந்த போதும் அவர்களால் கோப்பையை மட்டும் வெல்லமுடியாமலே போனது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு நல்ல அணியாக உருவெடுத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையில் கோப்பை வெல்லக்கூடிய ஒரு அணியாக வலம்வருகிறது.

RR 2008 IPL Champions
RR 2008 IPL Champions

இருந்தபோதிலும் தொடக்கத்தில் எந்த அணியாலும் வீழ்த்தவே முடியாது எனும் நிலையில் அபாரமாக செயல்பட்டுவந்த அந்த அணி, தற்போது தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து சுமாராக விளையாடிவருகிறது.

ஆரம்பத்தில் RR அணிக்குதான் கோப்பை என நினைத்த எல்லோரும், தற்போது ’இந்த அணிலாம் கோப்பை வெல்லாது’ என கூறும் அளவு ஒரு மோசமான ஆட்டத்தை விளையாடிவருகிறது.

Rajasthan Royals team
Rajasthan Royals teamSwapan Mahapatra

நேற்றைய போட்டியில் வென்றால் இரண்டாம் இடத்தை வலுவாக தக்கவைத்துக்கொள்ளலாம் என்னும் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

RR vs PBKS
’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI

மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய RR!

நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இல்லாததால் அவருக்கு மாற்றுவீரராக மற்றொரு இங்கிலாந்து வீரரான டாம் கோலருடன் சென்றது ஆர்ஆர் அணி. டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆனால் எதற்காக பேட்டிங் எடுத்தோம் என வருத்தப்படும் அளவு ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியது ராஜஸ்தான் அணி.

jaiswal
jaiswal

தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் 4 ரன்னில் போல்டாகி வெளியேறி, தன்னுடைய மோசமான ஃபார்மை தொடர்ந்தார். பட்லருக்கு மாற்றாக வந்த வீரர் ஏதோ பெருசா அடிக்கப்போகிறார் என்று பார்த்தால், 23 பந்துக்கு 18 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். உடன் கேப்டன் சஞ்சு சாம்சனும் ஒரு சுமாரான ஷாட் ஆடி வெளியேற, 42 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி தடுமாறியது.

Tom Kohler-Cadmore
Tom Kohler-Cadmore

ஒரு மோசமான நிலையில் இருந்த அணியை மீட்டுவர ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னதாக களமிறக்கிய RR அணி, ஒரு ஸ்மார்ட்டான மூவ் மூலம் ரன்களை எடுத்துவந்தது.

இறங்கியதிலிருந்தே 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரன்வேகத்தை அதிகப்படுத்தினார். உடன் மறுமுனையில் இருந்த ரியான் பராக்கும் 6 பவுண்டரிகளை விரட்ட, ஒரு டீசண்ட்டான டோட்டல் வரும் என எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ashwin
ashwin

ஆனால் அஸ்வின் 28 ரன்னிலும், பராக் 48 ரன்னிலும் அவுட்டாகி வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். தொடர்ந்து ராஜஸ்தான் அணியை எழவே விடாமல் அபாரமாக பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 144 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

RR vs PBKS
ரோகித், பும்ராவை தொடர்ந்து சூர்யகுமார்? தொடர்ந்து உடையும் மும்பை அணி! என்ன நடந்தது?

தனியாளாக வென்ற சாம்கரன்!

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, பிரப்சிம்ரனை 6 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவை 14 ரன்னிலும் வெளியேற்றிய ராஜஸ்தான் பவுலர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதற்குபிறகு களமிறங்கிய ரைல் ரோஸ்ஸோவ் அதிரடியாக 5 பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தார். ஆனால் 22 ரன்களில் ரைல் ரோஸ்ஸோவை வெளியேற்றிய ஆவேஷ் கான், அடுத்துவந்த ஷசாங் சிங்கை 0 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

ஆவேஷ் கான்
ஆவேஷ் கான்

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலைக்கு சென்றது. ஆனால் அதற்குபிறகு கைக்கோர்த்த கேப்டன் சாம் கரன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஒருபுறம் சாம்கரன் பவுண்டரிகளாக விரட்ட, மறுமுனையில் இருந்த ஜிதேஷ் சர்மா 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். 5வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி, ஆர்ஆர் அணியின் கையில் இருந்த போட்டியை தட்டிப்பறித்தது.

சாம்கரன்
சாம்கரன்

முக்கியமான நேரத்தில் ஜிதேஷ் சர்மாவை வெளியேற்றிய ராஜஸ்தான் அணி கம்பேக் கொடுத்தாலும், களத்தில் நிலைத்து நின்று அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாம்கரன் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து அரைசதமடித்து அசத்தினார். ஒருபுறம் 63 ரன்களுடன் சாம்கரன் நிலைத்து நிற்க, கடைசியாக வந்த அஷுதோஸ் சர்மா சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒரு அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆட்டநாயகனாக சாம்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RR vs PBKS
BCCI அழுத்தத்தால் தான் ஹர்திக் தேர்வு.. டி20-லிருந்து ஓய்வுபெற ரோகித் முடிவு! அதிர்ச்சி தகவல்!

16 வருட கோப்பை கனவு நிறைவேறுமா?

தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து தடுமாறிவருகிறது. இப்படியே போனா 16வருட கோப்பை கனவை மூட்டைக்கட்ட வேண்டியதுதான்.

பட்லரும் அணியில் இல்லை, சஞ்சுசாம்சன், ரியான் பராக் இரண்டு வீரர்கள் மட்டுமே அடித்து வருகிறார்கள், அவர்களும் விரைவில் அவுட்டாகி வெளியேறினால் RR அணியால் மீண்டுவரவே முடியவில்லை. இதுபோல ஒரு அணியை வைத்துக்கொண்டு எப்படி SRH, KKR போன்ற அணிகளை ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லப்போகிறது என்று தெரியவில்லை.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ஒருவேளை ராஜஸ்தான் அணி அடுத்தப்போட்டியிலும் தோற்றுவிட்டால், தங்களுடைய 2வது இடத்தை பறிகொடுக்கும் நிலைக்கு செல்லும். தற்போது 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் 2வது இடத்தை பிடிக்க போராடும். இதில் சோகம் என்னவென்றால் கடைசி லீக் போட்டியில் KKR அணியை எதிர்த்து விளையாடவிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

RR vs PBKS
"டிரென்ட் போல்ட் இல்லை.. அவர் தான் என்னை அதிகம் பயமுறுத்தினார்! 100 முறை பார்ப்பேன்!" - ரோகித் சர்மா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com