pakistan player shoaib maliks wife fight with sarfaraz ahmed
சோயிப் மாலிக், சனா ஜாவேத், சர்ஃபராஸ் அகமதுஎக்ஸ் தளம்

பாகிஸ்தான் | முன்னாள் கேப்டனிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மாலிக் மனைவி!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவி சனா ஜாவேத் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
Published on

'ஜீட்டோ பாகிஸ்தான்' என்ற தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவுடன் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவி சனா ஜாவேத் பங்கேற்றார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், சனா அவரிடம், “யாரோ உங்களை காயப்படுத்தியது போல் பேசுகிறீர்கள்” என வினவினார். அதற்கு சர்ஃபராஸ், "நான் விளையாட வேண்டிய இடத்தில் விளையாடினேன்" எனப் பதிலளித்தார். இதற்கு மீண்டும் பதிலளித்த சனா, “நான் என் கணவருடன் எப்படி வேண்டுமானாலும் விளையாட முடியும்" எனத் தெரிவித்தார். அவருடைய இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இணையவாசிகள் அவருக்கு எதிராகப் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

சனாவும் மாலிக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். மாலிக், முன்பு முன்னாள் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை மணந்து, பின்னர் அவரை விவாகரத்து செய்திருந்தார். அதுபோல், சனாவும் தனது முன்னாள் கணவர் உமர் ஜஸ்வாலிடம் இருந்து விவாகரத்து பெற்றததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷோயப் மாலிக்கும் சனா ஜாவேத்தும் தொடர்ச்சியாக டிவி நிகழ்ச்சியில் சந்தித்ததன் காரணமாக, அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

pakistan player shoaib maliks wife fight with sarfaraz ahmed
T20 போட்டியில் 3 No Ball வீசிய சோயிப் மாலிக்.. திருமணத்துடன் ஒப்பிட்டு டிரோல் செய்துவரும் ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com