நட்சத்திர வீரர்கள் யாருமே இல்லை.. ஆனாலும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்திய நியூசிலாந்து அணி!

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியில் முன்னணி நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே அந்த அணியை வீழ்த்தியிருப்பது பேசுபொருளாகி வருகிறது.
நியூசிலாந்து
நியூசிலாந்துட்விட்டர்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, அங்கு நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் கைவிட்டப்பட்ட நிலையில், 2வது போட்டியில் பாகிஸ்தானும், 3வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதையடுத்து இரு அணிகளும், தலா 1 போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இரு அணிகளும் தொடரை வெல்ல தீவிரம் காட்டி வருகின்றன. இதில் பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து அணியில் முன்னணி நட்சத்திர வீரர்கள் யாருமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால், 16 நட்சத்திர வீரர்கள் இல்லாத ஒரு மூன்றாம் தரமான அணியே உள்ளது. எனினும், பாகிஸ்தானை அதன் சொந்தமண்ணில் வைத்து நியூசிலாந்து அணி வீழ்த்தி இருப்பது பேசுபொருளாகி வருகிறது.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

நியூசிலாந்து
SA vs NZ | 92 ஆண்டு கனவு... 18ஆவது முயற்சி... கனவை நனவாக்கிய நியூசிலாந்து அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com