ஐபிஎல் வரலாற்றில் வெற்றி ’கிங்’ ஆக தொடரும் தோனி ! நெருக்கத்தில் பின்தொடரும் ரோகித்.. முறியடிப்பாரா?

சென்னை அணி கேப்டனான தோனி, ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடுவது மட்டுமின்றி, கேப்டன்ஷிப்பிலும் நிறைய போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்தவர் எனச் சாதனையைப் படைத்துள்ளார்.
dhoni
dhonifile image

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், ‘தல’ என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனக்கென ஓர் அடையாளத்தைக் கொண்டிருப்பதுடன் ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. சென்னை அணி, இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பைகளை உச்சி முகர்ந்துள்ளது. இந்த முறையும் கோப்பையும் வெல்லும் முனைப்பில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

தோனி
தோனிfile image

தோனி இதுவரையில் சென்னை அணியை 199 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி உள்ளார். இன்றைய போட்டி, அவருடைய 200வது தலைமையாக அமைய இருக்கிறது. இதை, சென்னை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல்லில் இந்த மைல்கல்லைக் கடந்த ஒரே வீரராகவும் தோனி, உள்ளார். ஆகையால், இச்சாதனை குறித்த பயணத்தை இங்கு பார்ப்போம்.

இதுவரை 237 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, இன்றைய போட்டியின் மூலம் சென்னை அணியில் 200 போட்டிகளுக்கு தலைமையேற்ற கேப்டன் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார். இது ஒருபுறமிருக்க மறுபுறம், சென்னைக்கு தலைமையேற்ற 199 போட்டிகளில் தோனி, 120 போட்டிகளை வென்று தந்திருக்கிறார். 78 போட்டிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 1 போட்டிக்கு முடிவில்லை.

dhoni
dhonifile image

இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 33 போட்டிகளையும் (வெற்றி 14, தோல்வி19, அதற்கு அடுத்தப்படியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 28 போட்டிகளையும் (வெற்றி 18, தோல்வி 9), அதைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் (வெற்றி 16, தோல்வி 10) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (வெற்றி 15, தோல்வி 11) ஆகிய அணிகளுக்கு எதிராக 26 போட்டிகளையும் விளையாடியுள்ளார். கொல்கத்தா அணிக்கு (வெற்றி 17, தோல்வி 8) எதிராக 25 போட்டிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு (வெற்றி 15, தோல்வி 9) எதிராக 24 போட்டிகளையும் விளையாடியுள்ளார்.

Vs ஹைதராபாத், போட்டி - 16.. வெற்றி - 13, தோல்வி - 3

Vs டெக்கன் சார்ஜஸ், போட்டி - 10.. வெற்றி - 6, தோல்வி - 4

அதேநேரத்தில், சென்னை தவிர்த்து அவர் ரைஸின் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். அதன்படி, அவர் மொத்தம் 213 போட்டிகளுக்கு கேப்டனாக உள்ளார். இதில் புனே அணிக்கு 14 போட்டிகளில் கேப்டனாய்ப் பதவி வகித்துள்ளார்.

இதுவரை ஐபிஎல்லில் 213 போட்டிகளுக்கு கேப்டனாகப் பதவியேற்றிருக்கும் தோனி, அதில் 125 வெற்றிகளைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார்.

அதாவது, ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் கேப்டனாய்ப் பங்கேற்றதிலும் வெற்றிபெற்றதிலும் தோனியே முதலிடத்தில் உள்ளார். இதில் அவரது தலைமையின் கீழ் 87 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன. 1 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. இவரது வெற்றி சராசரி 58.96%.

dhoni, rohit sharma
dhoni, rohit sharmafile image

இந்தப் பட்டியலில் தோனியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அவர், இதுவரை 146 போட்டிகளுக்கு (மும்பை அணிக்கு மட்டும்) கேப்டனாய்ப் பங்கேற்று அதில் 80 வெற்றிகளையும் 62 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். 4 போட்டிகள் சமம் ஆகி உள்ளன. இவரது கேப்டன்ஸி வெற்றி சதவிதம் 56.16%

இவர்களைத் தொடர்ந்து 3வது இடத்தில் இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி உள்ளார். அவர், பெங்களூரு ராயல் சேலஞ்ர்ஸ் அணிக்காக 140 போட்டிகளில் தலைமை தாங்கி 64 போட்டிகளை வென்று தந்துள்ளார். 69 போட்டிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இவரது வெற்றி சதவிதம் 48.16%

இந்தச் சாதனை பட்டியலில் தோனி, 125 போட்டிகளில் வெற்றிபெற்று 58.96 சதவிகிதத்தைப் பெற்றிருந்தாலும், ரோகித் அவரை குறைந்த சதவிகிதத்திலேயே பின் தொடர்ந்து வருகிறார். ரோகித், 80 போட்டிகளில் வெற்றிபெற்று தன்னுடைய வெற்றி சதவிகிதத்தை 56.16 ஆக வைத்துள்ளார்.

இதன்மூலம் தோனிக்கும் ரோகித்தும் 2.8 சதவிகிதமே உள்ளது. ரோகித் சர்மா, தன்னுடைய தலைமையின்கீழ் நிறைய வெற்றிகளை இந்த சீசனிலேயே பதிவு செய்தால், அதன்மூலம் தோனியை 2வது இடத்திற்கு தள்ளிவிட வாய்ப்புகள் உண்டு.
MS Dhoni
MS DhoniPTI

அதேநேரத்தில், தோனியும் அதற்கு இடம் கொடுக்காமல் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தால், அவரே முதல் இடத்தில் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை தோனி, அடுத்த ஐபிஎல்லில் பங்கேற்காமல் ஓய்வுபெற்றுவிட்டால் நிச்சயம் இது மாறும். அதை ரோகித் சர்மா 100 சதவிகிதம் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது. காரணம், தோனிக்கு அடுத்து ரோகித் சர்மாவும் வார்னரும் மட்டுமே தற்போது கேப்டனாக தொடருகின்றனர். அதிலும் இந்த சதவிகித வித்தியாசத்தில் வார்னர் எங்கோ இருக்கிறார். ஆக, ரோகித்துக்கே நிறைய வாய்ப்புகள் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com