‘Low Score-ல கூட 14 எகானமி..’ பாழாய் போகும் 24 கோடி.. கம்பீரை மதிக்காத ஸ்டார்க்! KKR வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
KKR - DC
KKR - DCPT

17 வருட ஐபிஎல் வரலாற்றில் இல்லாத வகையில், எந்த அணி வேண்டுமானாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையானது, பாதி தொடர் கடந்தபின்பும் நடப்பு ஐபிஎல் தொடரில் நீடித்துவருகிறது.

ராஜஸ்தான் ஒரு அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் சரிசமமான புள்ளிகளுடன் இருப்பதால், யார் வேண்டுமானாலும் டாப் 4 பட்டியலுக்குள் வரலாம் என்னும் நிலை உருவாகியுள்ளது. அதனால் அனைத்து அணிகளும் வாழ்வா-சாவா போராட்டம் நடத்திவருகின்றன.

KKR - DC
28 முறை அடிக்கப்பட்ட 200+ டோட்டல்.. பவுலர்கள் மேல் கருணையே இல்லையா? ஜாம்பவான்களின் குற்றச்சாட்டு !

வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கிய DC!

இதில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது டெல்லி கேபிடல்ஸ் அணி. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்யாமல் பேட்டிங்கை தேர்வுசெய்தது அந்த அணிக்கு பாதகமாக மாறியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு எதிராக தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கொல்கத்தா பவுலர்கள், டெல்லி அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ஜேக் பிரேசர், பிரித்வி ஷா மற்றும் சாய் ஹோப் மூன்று பேரையும் விரைவாகவே வெளியேற்றி அடிக்கு மேல் அடி கொடுத்தனர்.

அரோரா
அரோரா

37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி போராடினாலும், 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அபிஷேக் போரல் இருவரும் அதிரடியான ஆட்டத்தையே தொடர்ந்தனர். அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு கெத்துக்காட்டிய இந்த ஜோடி, 6 ஓவர்களுக்கு 67 ரன்கள் எடுத்துவந்து மிரட்டிவிட்டது.

பண்ட்
பண்ட்

கடந்த போட்டியை போல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும், பெரிய டோட்டலை எடுத்துவரலாம் என ஆடிய டெல்லி அணிக்கு, பாதி போட்டிக்கு பிறகு ஆடுகளத்தில் பந்து நின்றுவர தொடங்கியது பெரிய அடியாக விழுந்தது. ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததால் சரியாக நேரம் கணக்கிட முடியாமல் தடுமாறிய கேப்டன் ரிஷப் பண்ட், 27 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உடன் அபிஷேக் போரல் போல்டாகி நடையை கட்ட, களத்திற்கு வந்த ஸ்டப்ஸ் “நானும் பின்னாடியே வரேன்” என 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய வருன் சக்கரவர்த்தி, டெல்லி அணியை நிலைகுலைய வைத்தார்.

KKR - DC
2010-ல் தோனி.. 2024-ல் சாம்சன்! அதே கர்ஜனை.. அதே எமோசன்! இது WC தேர்வுக்குழுவுக்கு அடித்த அடி!

தலைவலி கொடுத்த குல்தீப் யாதவ்! 

111 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி மோசமான நிலைக்கு செல்ல, எப்படியும் அடுத்த 10 ரன்களுக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 9வது வீரராக களமிறங்கிய குல்தீப் யாதவ், கொல்கத்தா அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

ஸ்டார்க் வீசிய ஓவரில் சிக்சர் பவுண்டரி என விரட்டிய குல்தீப், 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 153 ரன்கள் என்ற டீசண்ட்டான டோட்டலுக்கு டெல்லி அணியை அழைத்துச்சென்றார்.

KKR - DC
இதான் ரியல் RCB.. இவ்வளவு நாளா எங்கப்பா இருந்திங்க? ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜாக்ஸ்! அசத்தல் வெற்றி!

சால்ட் அதிரடியால் வென்ற KKR!

154 ரன்கள் என்ற சுமாரான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய பிலிப் சால்ட் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு, தனியொரு ஆளாக டெல்லி அணியை தோற்கடித்தார்.

சுனில் நரைன் 3 பவுண்டரிகளை விரட்ட, 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என துவம்சம் செய்த சால்ட் முதல் 6 ஓவரிலேயே 79 ரன்களை எடுத்துவந்து சம்பவம் செய்தார். சால்ட் 68 ரன்கள் அடித்து அசத்த, 17வது ஓவரிலேயே இலக்கை எட்டிய கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.

Salt
Salt

5 வெற்றிகளுடன் வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த டெல்லி அணி, இந்த தோல்வியின் மூலம் மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

KKR - DC
5-0.. சேஸிங் மறந்துபோச்சு மேடம்! சென்னையில் அஸ்தமனமான Sunrisers! வரலாறு படைத்த தோனி!

முறைத்த கம்பீரை மதிக்காத ஸ்டார்க்!

என்னதான் கொல்கத்தா அணி இந்த போட்டியில் வென்றிருந்தாலும், 24 கோடி விலைக்கு வாங்கப்பட்ட அந்த அணியின் மெயின் பவுலரான மிட்செல் ஸ்டார்க்கின் ஃபார்ம் தொடர்ந்து மோசமாகவே இருந்துவருகிறது.

கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை விட அதிக அரைசதங்களை அடித்திருக்கும் மிட்செல் ஸ்டார்க், Low Score போட்டியான இந்த மேட்ச்சிலும் 14 ரன்கள் எகானமியை விட்டுக்கொடுத்தது பெரிய பாதகமாக பார்க்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால் அந்த அணி பிளே ஆஃப் சென்றாலும் படுதோல்வியை சந்திக்க நேரிடும்.

Starc - Gambhir
Starc - Gambhir

இந்தப்போட்டியில் ஸ்டார்க்கிற்கு எதிராக குல்தீப் யாதவ் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட, அதை பார்த்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் “என்னப்பா பன்ற” என்பது போல் ஸ்டார்க்கை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார். டைம் அவுட் இடைவெளியின் போது ஸ்டார்க்கிடம் வந்து பேசிய கவுதம் காம்பீர், ”என்ன பண்ண சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க” என்பது போல் ஆவேசமாக பேச, அதை பெரிதும் அலட்டிக்கொள்ளாத ஸ்டார்க், ஃபீல்டர் மீதுதான் தவறு என்பது போல் சைகை செய்தார்.

ஒரு சிக்சர் போனதுக்கு ஃபீல்டர்தான் காரணம் என சொன்னாலும், ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சில் அரைசதம் அடிப்பதற்கு யார் காரணம் என்று தான் தெரியல”.

24 கோடி கொடுத்து வாங்குனதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட

- என்பது போல கம்பீர் ரியாக்சன் கொடுத்து சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தங்களுடைய பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை வலுப்படுத்தி உள்ளது.

KKR - DC
கத்திமுனையில் 9 அணிகள்; இதெல்லாம் நடந்தா RCB Playoffs செல்லும்! CSK அணிக்கு இருக்கும் ஆபத்து?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com