உயிரை கொடுத்து போராடிய வீரர்கள்..சிக்சர் மழை பொழிந்த ரஸ்ஸல்-க்ளாசன்! கடைசிபந்தில் KKR த்ரில் வெற்றி!

பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4 ரன்னில் வெற்றிபெற்றது கொல்கத்தா அணி.
KKR - SRH
KKR - SRHweb

2024 ஐபிஎல் தொடங்கி 2 போட்டிகள் கடந்த நிலையில், என்ன பா இன்னும் அதிரடியை பார்க்கவே இல்லையே என்ற குறை மட்டும் நீடித்திருந்தது. அதிரடியா கேட்டீங்க? சரவடியே வருது பாருங்க என லீக்கின் 3வது போட்டியிலேயே அனல் பறக்கவிட்டுள்ளனர் ஆன்ட்ரே ரஸ்ஸல் மற்றும் க்ளாசன் இருவரும்.

KKR - SRH
DRS தெரியும் அது என்னங்க புதுசா SRS.. 2024 IPL-ல் அறிமுகமாகும் புதிய சிஸ்டம்! முழு விவரம்!

பீஸ்ட் மோடுக்கு சென்ற ஆன்ட்ரே ரஸ்ஸல்!

பரபரப்பான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. ஈடன் கார்டனில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி, சொந்த மைதனாத்தில் மோசமான தொடக்கத்தை அமைத்தது.சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஸ் ரானா மூன்று பேரும் ஓரிலக்க ரன்னில் வெளியேற, களத்திற்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி தடுமாறியது.

salt
salt

ஆனால் என்ன தான் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே போனாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற தொடக்க வீரர் சால்ட் 3 சிக்சர்கள், 3 பவுன்டரிகள் என பறக்கவிட்டு அரைசதமடித்து அசத்தினார். உடன் 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரமன்தீப் சிங் 17 பந்துகளில் 4 சிக்சர்கள் 1 பவுன்டரி என துவம்சம் செய்ய 12 ஓவர்களுக்கு 105 ரன்களை எட்டியது கொல்கத்தா அணி.

russell
russell

சால்ட் மற்றும் ரமன்தீப் இருவரும் அடுத்தடுத்து வெளியேற, கடைசியாக களத்திற்கு வந்த ஆன்ட்ரே ரஸ்ஸல் வானவேடிக்கை காட்டினார். "மனுசன் என்ன கோவத்துல வந்தாரோ தெரியல, எதிர்கொன்ட பவுலர்களை எல்லாம் சிக்சர்களாக பறக்கவிட்ட அவர், ஈடன் கார்டன் மைதானத்தில் சிக்சர் மழையை பொழிய வைத்தார்" 25 பந்துகளில் 7 சிக்சர்கள் 1 பவுன்டரி என அடித்து நொறுக்கிய ரஸ்ஸல் 250 ஸ்டிரைக்ரேட்டில் 63 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார். அவர் தான் ஒருபுறம் அடிக்கிறார் என்றால், ரிங்கு சிங் அவருடைய பங்கிற்கு 3 பவுன்டரிகளை விரட்ட 2024 ஐபிஎல் தொடரில் முதல் 200 ரன்களை எடுத்துவந்தது கொல்கத்தா அணி. 20 ஓவர் முடிவில் 208 ரன்களை சேர்த்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

KKR - SRH
RCB vs CSK: சிஎஸ்கே அணிக்கு எதிராக 3 இமாலய சாதனைகளை குவிக்கவிருக்கும் விராட் கோலி! ஆர்சிபி பேட்டிங்!

அடித்தால் சிக்சர் மட்டுமே என துவம்சம் செய்த க்ளாசன்!

209 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் அபிஷெக் ஷர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 8 பவுன்டரிகள் 3 சிக்சர்கள் என மாறிமாறி பறக்கவிட்ட இந்த ஜோடி 5 ஓவருக்கே 60 ரன்களை எடுத்துவந்து கலக்கிப்போட்டது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி, ஒரு கட்டத்தில் ஒரு ஓவருக்கு 14 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற மோசமான நிலைக்கு சென்றது. 17 ஓவரில் 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 15 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடியது. சரியான நேரத்தில் களத்திற்கு வந்த க்ளாசன், "ஆன்ட்ரே ரஸ்ஸல் மட்டும் தான் அடிப்பாரா, எங்களுக்கு அடிக்க தெரியாதா" என்று எதிர்கொண்ட பவுலர்களை எல்லாம் சிக்சர்களுக்கு அனுப்பி சரவெடியை கிளப்பினார்.

க்ளாசன்
க்ளாசன்

25 கோடி கொடுத்து எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்ட க்ளாசன் மிரட்டிவிட்டார். ஒரு பவுன்டரி கூட இல்லாமல் 8 சிக்சர்களை மட்டும் க்ளாசன் பறக்கவிட, வெறும் 15 பந்துகளுக்கு 58 ரன்களை வாரிகுவித்த சன்ரைசர்ஸ் அணி, வெற்றி இலக்கை கிட்டத்தட்ட எட்டிப்பிடித்தது. கடைசி 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற எளிதான நிலைக்கு போட்டி செல்ல, முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய க்ளாசன் அடுத்த பந்தில் சிங்கிளுக்கு செல்ல, கடைசி 4 பந்தில் 6 ரன்கள் என போட்டி மாறியது. சன்ரைசர்ஸ் ஓனர்கள் உட்பட SRH ரசிகர்கள் அனைவரும் வெற்றியை எட்டிப்பிடித்துவிட்டதாக களிப்பில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த, அடுத்தடுத்த பந்துகளில் சிறப்பாக பந்துவீசிய ஹர்சித் ரானா 3 பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார்.

KKR - SRH
மூச்சுமுட்டிய சேப்பாக்கம் மைதானம்; கெத்தாக RCBயை சம்பவம் செய்த CSK! வெற்றி கணக்கை துவங்கிய ருதுராஜ்!

கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்ற KKR!

கடைசி 1 பந்தில் 5 ரன்கள் தேவை என போட்டி அப்படியே தலைகீழாக திரும்ப, இந்த போட்டி எப்படியும் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமானது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடைசி பந்தை எதிர்கொள்ள, அந்த பந்தையும் டாட் பந்தாக வீசிய ஹர்சித் ரானா கலக்கிப்போட்டார். கடைசிவரை பரபரப்பாக சென்ற போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு த்ரில் வெற்றியை சந்தித்தது.

24 கோடிக்கு எடுத்த ஸ்டார்க் மற்றும் 20 கோடிக்கு எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ் இருவரும் கடினமான நேரத்தில் சோபிக்கவில்லை. ஆட்டநாயகன் விருது அதிரடி மன்னன் ரஸ்ஸலுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் நிச்சயம் ஆன்ட்ரே ரஸ்ஸல் மற்றும் க்ளாசன் இருவருக்குமே ஆட்டநாயகன் விருதை கொடுத்திருக்க வேண்டும். என்ன மாதிரியான ஒரு போட்டியை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்துள்ளனர்.உண்மையான ஐபிஎல் போட்டியென்றால் இதுதான், நிஜமான ஐபிஎல் தொடர் ஆரம்பித்துவிட்டது!

KKR - SRH
’முடிவுக்கு வந்தது Dhoni-ன் கேப்டன்சி சகாப்தம்’! CSK-ன் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com