காவ்யா மாறன்
காவ்யா மாறன்ட்விட்டர்

1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH.. செம்ம உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன்.. #ViralVideo

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன்னில் திரில் வெற்றிபெற்ற சந்தோஷத்தை, ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கொண்டாடிய காட்சி இணையத்தில் வைரலானது.

கடைசி ஒரு பந்தில்கூட எதுவும் நடக்கலாம் என்பதற்கு ஐபிஎல்லின் பல போட்டிகளை உதாரணமாகக் கூறலாம். அப்படியான ஒரு போட்டியாக அமைந்ததுதான் நேற்றைய போட்டி. நடப்பு ஐபிஎல் தொடரில் 50வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸும் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு ரன்னில் வெற்றியைக் கோட்டைவிட்டது.

அதாவது, இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, புவனேஷ்வர் குமார் வீசிய அந்த பந்தில் ரோவ்மன் பவல் எல்.பி.டபிள்யூ முறையில் முறையில் அவுட் ஆனார். இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் திரில் வெற்றி பெற்றது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹைதராபாத் அணி, ஆனந்தவெள்ளத்தில் கரைந்தது. அவ்வணியின் எல்லா வீரர்களும் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

இதைவிட, அதிக மகிழ்ச்சியைக் கொண்டாடியவர் அவ்வணியின் உரிமையாளரான காவ்யா மாறன்தான்.

இதையும் படிக்க: நியாயமா இது! ரன் ஓடாமல் ’திரும்பிப் போ’ எனக் கத்திய தோனி.. நூலிழையில் தப்பித்த மிட்செல்! #ViralVideo

காவ்யா மாறன்
RCBயிடம் வீழ்ந்தது SRH.! சொதப்பிய பேட்டர்களால் வருத்தத்தில் காவ்யா மாறன்.. #viralphotos #Viralvideo

அந்த அணி வெற்றிபெற்ற சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் காவ்யா மாறன். கடந்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்திருந்தது ஹைதராபாத் அணி. அப்போதெல்லாம் காவ்யா மாறன், மிகுந்த வருத்தத்திலேயே இருந்தார். தவிர, அவர் அணி வீரர்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும்போதுகூட காவ்யா மாறனின் முகத்தில் கவலையே தாண்டவமாடியதை கேமராக்கள் அவ்வப்போது படம்பிடித்துக் காட்டின.

குறிப்பாக, சென்னை மேட்சின்போது டோனி அமைத்த ஃபீல்டிங்கில், டிராவிஸ் ஹெட் வீழ்ந்ததைக் கண்டு காவ்யா மாறனே வியந்துபோனார். இந்த நிலையில்தான் தொடர் தோல்விக்கு மருந்தாய் வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் உற்சாகமாகி இருக்கிறார் காவ்யா மாறன். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: 2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

காவ்யா மாறன்
CSK Vs SRH|ஃபீல்டிங் அமைத்த தோனி.. வீழ்ந்த டிராவிஸ் ஹெட்.. ஷாக் ஆன காவ்யா மாறன்! #Videoviral

அதேபோல், கேப்டன் பேட் கம்மின்ஸ் வீடியோ ஒன்றும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, போட்டியில் நெருக்கடியான சூழல் வரும் போது அதாவது ஹைதராபாத் வீரர்கள் ஆட்டமிழக்கும் போதும், ராஜஸ்தான் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யும் போதும் இறுக்கமான முகத்துடனும், ஹைதராபாத் வீரர்கள் சிறப்பாக விளையாடும் போதும் மகிழ்ச்சி பொங்கும் முகத்துடனும் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதேபோல், ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய தமிழ்நாடு வீரர் நடராஜன் தொடர்பாகவும் சில வீடியோக்கள் வலம் வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com