karnataka high court grants interim bail to rcb official
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூருfb

ரசிகர்கள் உயிரிழப்பு | RCB நிர்வாகிகளுக்கு ஜாமீன்!

RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆர்சிபி அணி மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டிஎன்ஏ நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
Published on

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வீரர்கள் பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் சின்னசாமி மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.

karnataka high court grants interim bail to rcb official
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்எக்ஸ் தளம்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர, கர்நாடக உயர்நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று விசாரித்து வருகிறது. முன்னதாக, விசாரணை தொடர்பாக ஆர்சிபி அணியின் உரிமையாளரான ஆர்சிபிசிஎல் நிறுவனத்தின் மார்க்கெடிங் மேலாளர் நிகில் சோஸலே, இயக்குநர் சுனில் மேத்யூ, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் குமார், தனிநபர் சேவை வழங்குநர் ஷமந்த் என்.பி உள்ளிட்ட நால்வரை கர்நாடக காவல்துறை ஜூன் 6 அன்று கைது செய்தது. கைதான 4 பேரும் பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், அவர்​கள் ஜாமீன்​கோரி கர்நாடக உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனு நீதிபதி எஸ்​.ஆர்​.கிருஷ்ணகு​மார் முன்​னிலை​யில் நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்போது நீதிபதி, “பெங்​களூரு நெரிசல் உயிரிழப்​புகளுக்கு காரணம் யார் என்​பதை அரசு இன்​னும் முறை​யாக விசா​ரிக்​க​வில்​லை. அதற்​குள் கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டுள்​ளது. இவர்கள் நால்வரும் தவறு செய்திருப்பதற்கு எந்த முகாந்திரத்தையும் முன்வைக்காமல் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பதுடன், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

karnataka high court grants interim bail to rcb official
ரசிகர்கள் உயிரிழப்பு |கர்நாடக கிரிக்கெட் உயர் அதிகாரிகள் ராஜினாமா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com