லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்முகநூல்

ரிஷப் பண்ட் 27 கோடிக்கு வாங்கிய லக்னோ அணியின் புதிய லெவன்..!

இந்தக் கட்டுரையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் பற்றிப் பார்ப்போம்.
Published on

2025 ஐபிஎல் மெகா ஏலம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் புதிதாகப் பல வீரர்களை வாங்கியிருக்கிறார்கள். தங்களின் புதிய அணியை கட்டமைத்திருக்கிறார்கள். இந்த ஏலத்துக்குப் பிறகு அவர்களுடைய சிறந்த லெவன் எப்படி இருக்கும் என்பதை அலசிக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் பற்றிப் பார்ப்போம்.

மெகா ஏலத்தில் லக்னோ வாங்கிய வீரர்கள்:

மிட்செல் மார்ஷ் (3.4 கோடி), எய்டன் மார்க்ரம் (2 கோடி), ரிஷப் பண்ட் (27 கோடி), டேவிட் மில்லர் (7.5 கோடி), அப்துல் சமாத் (4.2 கோடி), ஆகாஷ் தீப் (8 கோடி), அவேஷ் கான் (9.75 கோடி), யுவ்ராஜ் சௌத்ரி (30 லட்சம்), மேத்யூ ப்ரீட்ஸ்கி (75 லட்சம்), ஹிம்மத் சிங் (30 லட்சம்), ஆர்ஷின் குல்கர்னி (30 லட்சம்), ஷபாஸ் அஹமது (2.4 கோடி), ஆர்யன் ஜூயல் (30 லட்சம்), ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் (30 லட்சம்), மணிமாறன் சித்தார்த் (75 லட்சம்), திக்வேஷ் சிங் (30 லட்சம்), ஷமார் ஜோசஃப் (75 லட்சம்), ஆகாஷ் சிங் (30 லட்சம்), பிரின்ஸ் யாதவ் (30 லட்சம்).

ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:

நிகோலஸ் பூரன் (21 கோடி), மயாங்க் யாதவ் (11 கோடி), ரவி பிஷ்னோய் (11 கோடி), ஆயுஷ் பதோனி (4 கோடி), மோசின் கான் (4 கோடி).

69 கோடி ரூபாயுடன் ஏலத்துக்குள் நுழைந்த லக்னோ அணி, யாரும் எதிர்பாராத வகையில் ரிஷப் பண்ட்டை வாங்கி அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றின் மிக அதிக தொகையான 27 கோடிக்கு அவர் வாங்கப்பட, அது லக்னோவின் தொகையை பெருமளவு குறைத்தது. அதன்பிறகு ஓரளவு சுமாரான அணியையே அவர்கள் கட்டமைத்திருப்பதாக பெரும் விமர்சனம் ஏற்பட்டிருக்கிறது. 24 வீரர்களை வாங்கிய அந்த அணி வெறும் 6 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வாங்கியது. அதிலும் ஒரேயொரு வெளிநாட்டு பௌலரை மட்டுமே வாங்கியிருக்கிறது.

இந்திய வீரர்களில் கூட பேட்ஸ்மேன்களில் அந்த அணி அதிகம் முதலீடு செய்யாமல் அதிகம் பௌலர்களை வாங்குவதில் செலவு செய்திருக்கிறது. ஏற்கெனவே 2 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை தக்கவைத்தவர்கள், ஆகாஷ் தீப் மற்றும் ஆவேஷ் கான் இருவருக்கும் சேர்த்தே சுமார் 17.75 கோடி செலவளித்திருக்கிறார்கள். போக, அணியில் வேறு அனுபவ இந்திய பேட்ஸ்மேனையும் அவர்கள் வாங்கவில்லை. ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனர்களையும் வாங்கவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகள்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்
Top 10 Sports| 16 வயது தமிழக வீராங்கனை 1.60 கோடி ஏலம் To ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி!

இத்தனை பிரச்னைகள் இருக்கும் அந்த அணியின் சிறந்த லெவன் எப்படி இருக்கும் பார்த்துவிடுவோம்.

லக்னோவின் சிறந்த பிளேயிங் லெவன்

1) மிட்செல் மார்ஷ்

2) எய்டன் மார்க்ரம்

3) ஆயுஷ் பதோனி

4) ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்)

5) நிகோலஸ் பூரன்

6) டேவிட் மில்லர்

7) ஷபாஸ் அஹமது

8) ரவி பிஷ்னோய்

9) ஆகாஷ் தீப்

10) அவேஷ் கான்

11) மயாங்க் யாதவ்

இம்பேக்ட் ஆப்ஷன்கள்: அப்துல் சமாத், மோசின் கான், மணிமாறன் சித்தார்த், ஆர்ஷின் குல்கர்னி

இந்த அணியைப் பார்க்கும்போது 4-8 அனைத்தும் இடது கை பேட்ஸ்மேன்களாகத் தெரியலாம். ஆயுஷ் பதோனியை மிடில் ஆர்டரில் எப்படிவேண்டுமானாலும் அந்த அணி பயன்படுத்தும் என்பதால், அவர் 5வது இடத்தில் கூட ஆடலாம். ஏற்கெனவே டி20 உலகக் கோப்பையில் பண்ட் மூன்றாவது வீரராக ஆடிய அனுபவம் கொண்டிருக்கிறார்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்
ஸ்ரேயாஸ் தொட்டதெல்லாம் தங்கம்.. 2024 சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது மும்பை!

இந்த பிளேயிங் லெவனில் அவர்களுக்கு 4 பௌலர்கள் போக ஷபாஸ், மிட்செல் மார்ஷ், மார்க்ரம் என 3 பௌலிங் ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதனால் அவர்கள் இம்பேக்ட் ஆப்ஷனை கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ததுபோல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் பேட்டிங்கின்போது ஏழாவது இடத்தில் அப்துல் சமாதை இறக்கிவிட்டுவிட்டு, பந்துவீச்சின்போது அவருக்குப் பதில் தேவைக்கேற்க ஸ்பின் என்றால் சித்தார்த், வேகம் என்றால் மோசின் கானை களமிறக்கலாம். மார்க்ரம் தொடக்க வீரராக சரியாக செயல்படாமல் போனால் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான மேத்யூ பிரீட்ஸ்கியை பரிசோதித்துப் பார்க்கலாம். அவர் ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனர். ஏற்கெனவே SA20 தொடரில் சூப்பர் ஜெயின்ட்ஸின் டர்பன் அணிக்காக விளையாடியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com