2025 மகளிர் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் அடிப்படை விலையாக 10 லட்சத்திற்கு வந்த 16 வயதேயான தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினி மும்பை அணியால் ரூ.1.60 கோடிக்கு வாங்கப்பட்டார்.
2025 மகளிர் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்றது. 19 இடங்களுக்கான ஏலத்தில் 120 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த மினி ஏலத்தில் 14 இந்திய வீரர்களும், 5 வெளிநாட்டு வீரர்களும் விலைக்கு வாங்கப்பட்டனர்.
அதிக தொகைக்கு சென்ற 5 வீரர்கள்,
சிம்ரன் ஷைக் - 1.90 கோடி - குஜராத் ஜெயன்ட்ஸ்
டியான்ட்ரா டாட்டின் - 1.70 கோடி - குஜராத் ஜெயன்ட்ஸ்
ஜி கமலினி - 1.60 கோடி - மும்பை இந்தியன்ஸ்
பிரேமா ராவத் - 1.20 கோடி - ஆர்சிபி
நல்லபுரெட்டி சரணி - 55 லட்சம் - டெல்லி கேபிடல்ஸ்
11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையிலான போட்டியில் 34-27 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் 2024 புரோ கபடி லீக் ரேஸிலிருந்து மூன்றாவது அணியாக தமிழ் தலைவாஸ் வெளியேறியுள்ளது.
இன்று நடைபெற்ற 2024 சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி.
2024 ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், அதற்கு பிறகு வீரராக 2024 ரஞ்சிக்கோப்பை, 2024 இரானி கோப்பை வென்றதோடு, தற்போது வரிசையாக 4வது கோப்பையாக சையத் முஸ்டாக் அலி கோப்பையையும் வென்றுள்ளார்.
ஐபிஎல்லில் கோப்பையே வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியை 2025 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் முகமதின் எஸ்சி - மும்பை சிட்டி எப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது முகமதின் அணி.
காபா மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த டிராவிஸ் ஹெட் 152 ரன்களை விளாசினார். இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா 405/7 ரன்களை குவித்துள்ளது.
இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து ஃபாக்ஸ் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரிட் லீ புகழ்ந்து கூறியுள்ளார். அப்போது அருகில் இருந்த இங்கிலாந்தின் முன்னாள் பெண் கிரிக்கெட்டர் இசா குஹா பும்ராவை most valuable Primate என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரைமேட் என்பது குரங்கு இனத்தை குறிப்பதாகவும், பும்ரா குறித்து இசா குஹா இனவெறி ரீதியில் பேசியிருப்பதாகவும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற யு மும்பா அணி மற்றும் உ.பி. யோதாஸ் இடையிலான போட்டியில் 30-27 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாஸ் வெற்றி பெற்றது.
21 வயதுக்குட்பட்டோருக்கான ஒன்பதாவது பெண்கள் ஜுனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியானது மஸ்கட்டில் நடந்துவந்தது. இதில் A பிரிவில் இடம்பெற்ற நடப்பு சாம்பியன் அணியான இந்தியா, அரையிறுதிபோட்டியில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொண்ட இந்திய அணி ஷூட் அவுட் முறையில் 3-2 என வீழ்த்தி தன்னுடைய நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தை தக்கவைத்து கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற போட்டி 1-1 என சமன் செய்யப்பட்ட நிலையில், ஷூட் அவுட் முறையில் இந்தியா 3-2 என சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.