டெல்லி கேபிடல்ஸ் அணி
டெல்லி கேபிடல்ஸ் அணிமுகநூல்

ராகுல், ஸ்டார்க், நடராஜன்... டெல்லி பிளேயிங் லெவனில் இந்த புதுமுகங்களின் இடம் எது?

இந்தக் கட்டுரையில் டெல்லி கேபிடல்ஸ் அணி எப்படி இருக்கிறது என்று அலசுவோம்.
Published on

2025 ஐபிஎல் மெகா ஏலம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்துவிட்டது. 2 நாள்கள் நடந்த ஏலத்தில் பல அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் அரங்கேறின. புதிய அணிகள் உருவாகியிருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியின் பிளேயிங் லெவனும் எப்படி இருக்கலாம் என்று அலசிக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் டெல்லி கேபிடல்ஸ் அணி எப்படி இருக்கிறது என்று அலசுவோம்.

தங்கள் கேப்டனை ரிலீஸ் செய்த டெல்லி கேபிடல்ஸ், ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் பஞ்சாப் கிங்ஸுக்கு சென்றுவிட, யாரும் எதிர்பாராத வகையில் ராகுலை வாங்கியது டெல்லி. அவரை வெறும் 14 கோடிக்கே எடுத்துவிட்டதால், அவர்களால் இன்னும் சில நட்சத்திர வீரர்களையும் வாங்க முடிந்தது. முந்தைய சீசனில் இருந்ததை விட ஒரு முழுமையான அணியை இம்முறை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்டார்க், நடராஜன் போன்றவர்களை வாங்கி பௌலிங்கைப் பலப்படுத்தியிருக்கிறார்கள்.

மெகா ஏலத்தில் வாங்கியவர்கள்

கேஎல் ராகுல் (14 கோடி), ஜேக் ஃப்ரேஸர் - மெக்கர்க் (10 கோடி - RTM), ஹேரி புரூக் (6.25 கோடி), அஷுதோஷ் ஷர்மா (3.8 கோடி), மோஹித் ஷர்மா (2.2 கோடி), முகேஷ் குமார் (8 கோடி - RTM), தங்கராசு நடராஜன் (10.75 கோடி), ஃபாஃப் டுப்ளெஸி (2 கோடி), டோனவன் ஃபெரேரா (75 லட்சம்), கருன் நாயர் (50 லட்சம்), சமீர் ரிஸ்வி (95 லட்சம்), திரிபுரனா விஜய் (30 லட்சம்), அஜய் மண்டல் (30 லட்சம்), மாதவ் திவாரி (40 லட்சம்), தர்ஷன் நல்கண்டே (30 லட்சம்), விப்ராஜ் நிகம் (50 லட்சம்), துஷமந்தா சமீரா (75 லட்சம்), மன்வந்த் குமார் (30 லட்சம்), மிட்செல் ஸ்டார்க் (11.75 கோடி)

ரீடெய்ன் செய்திருந்தவர்கள்

அக்‌ஷர் படேல் (16.5 கோடி), குல்தீப் யாதவ் (13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (10 கோடி), அபிஷேக் போரல் (4 கோடி)

டெல்லி கேபிடல்ஸ் சிறந்த பிளேயிங் லெவன்

1) கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்)

2) ஜேக் ஃப்ரேஸர் - மெக்கர்க்

3) அபிஷேக் போரல்

4) ஹேரி புரூக்

5) டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

6) அக்‌ஷர் படேல்

7) அஷுதோஷ் ஷர்மா

8) மிட்செல் ஸ்டார்க்

9) குல்தீப் யாதவ்

10) முகேஷ் குமார்

11) டி நடராஜன்

இம்பேக்ட் பிளேயர்: மோஹித் ஷர்மா

டெல்லி கேபிடல்ஸ் அணி
சையத் முஷ்டாக் அலி FINAL: 81 ரன்கள் விளாசிய ரஜத் பட்டிதார்.. மும்பைக்கு 175 ரன்கள் இலக்கு!

டெல்லி கேபிடல்ஸ் தங்கள் பந்துவீச்சை பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறார்கள். பவர்பிளேவில் ஸ்டார்க் + முகேஷ், மிடில் ஓவர்களில் அக்‌ஷர் + குல்தீப், டெத் ஓவர்களில் ஸ்டார்க் + நடராஜன் என ஒரு அற்புதமான பௌலிங் படை உருவாகியிருக்கிறது. வேகப்பந்துவீச்சு, ஸ்பின் என எல்லாமே டாப் கிளாஸாக இருக்கிறது. ஸ்டார்க்குக்கு பேக் அப் ஆப்ஷனாக துஷமந்தா சமீரா போன்ற அனுபவ வீரர் இருக்கிறார். அதேசமயம், இவர்களின் முன்னணி இந்திய பௌலர்களுக்கு சரியான பேக் அப் ஆப்ஷன்கள் இல்லை. அவர்கள் எடுத்திருக்கும் வீரர்கள் ஐபிஎல் அரங்கில் இதுவரை தங்களை நிரூபித்ததில்லை. அது அவர்களுக்கு சிக்கலாக அமையலாம்.

இந்த முறை அவர்கள் பேட்டிங்கும் கூட நன்றாகவே தெரிகிறது. தொடர்ந்து ஸ்டிரைக் ரேட் விமர்சனத்துக்கு ஆளாகும் ராகுலுக்கு, இப்போது ஃப்ரேஸர் - மெக்கர்க் போன்ற ஒரு வீரரோடு ஆடும்போது நெருக்கடி இருக்காது. புரூக், ஸ்டப்ஸ் ஆகியோர் மிடில் ஆர்டரை பலப்படுத்துகிறார்கள். ஒருவேளை, புரூக் அல்லது ஃப்ரேஸர் - மெக்கர்க் ஆகியோரில் ஒருவர் சரியாக ஆடவில்லை என்றாலும், அந்த இடத்தை நிரப்ப ஃபாஃப் டுப்ளெஸி போன்ற ஒரு அனுபவ வீரர் இருக்கிறார். சமீர் ரிஸ்வி, கருன் நாயர் போன்ற இந்திய வீரர்களும் இருப்பது நல்ல விஷயம்.

டெல்லி கேபிடல்ஸ் அணி
2025 மகளிர் ஐபிஎல் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன 5 பேர்.. முதலிடத்தில் இந்திய வீராங்கனை!

அனைத்தையும் விட முக்கியமான கேள்வி யார் இந்த அணியின் கேப்டன் என்பதுதான். அக்‌ஷர் படேலா, கே.எல்.ராகுலா என்று இப்போது கேள்வி நிலவிக்கொண்டிருக்க, 'இப்போது எதையும் உறுதியாக சொல்ல முடியாது' என்று கூறியிருக்கிறார் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால். பேட்டிங், பௌலிங் பலமாக இருக்கும் நிலையில், அந்த கேப்டன்சி முடிவு அவர்கள் சீசன் எப்படிச் செல்லும் என்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com