RR Vs SRH| IPL Finalக்குச் செல்வது யார்? கை ஓங்கியிருக்கும் RR.. கைப்பற்றத் துடிக்கும் SRH!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2-வது போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில், யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.
rr vs srh
rr vs srhtwitter

இரண்டு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, இன்னும் இரண்டு தினங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2-வது போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது.

சேப்பாக்கத்தில் இந்தப் போட்டி நடைபெற இருப்பதால், யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்தப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கைகளே ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகிது.

குறிப்பாக, அந்த அணியினர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் இருக்கின்றனர். வேகப்பந்து பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் அஸ்வின், சாஹல், மஹாராஜ் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அதேபோல் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இல்லாவிட்டாலும், ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மையர், ரோவ்மேன் பவல் ஆகியோர் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே இருக்கு; இதெல்லாம் நடக்கும்” - இந்திய ஜோதிடர் கணிப்பு!

rr vs srh
RR Vs RCB | எலிமினேட்டர் சுற்று.. சமபலத்தில் இரு அணிகள்... வெளியேறப்போவது யார்?

அத்துடன், சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சுழலுக்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு இல்லையென்றால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், ராஜஸ்தான் அணி சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாய்த் திகழ்கிறது. மேலும், சேப்பாக்கம் மைதானம் குறித்து அவ்வணி வீரரும், தமிழக வீரருமான அஸ்வினுக்கு அசாத்திய அறிவும் அனுபவமும் உள்ளது. மேலும் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் அந்த மைதானத்தைப் பற்றிய அனுபவம் நிறைய உண்டு. இவை எல்லாம் அந்த அணிக்குச் சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இதனால், இன்றைய ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடும் சவாலாகவே இருக்கக்கூடும்.

அதேநேரத்தில், ஐதராபாத் அணி முழுக்க முழுக்க கம்மின்ஸ், நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பவுலிங்கை மட்டுமே நம்பி உள்ளது. ஷாபாஸ் அகமது மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் சுழற்பந்து வீச்சு சேப்பாக்கத்தில் எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. அதுபோல் அவ்வணியில் தொடக்க பேட்டர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவையே பேட்டிங்கில் நம்பியுள்ளனர். ஒருவேளை, அவர்கள் இருவரும் முதல் பவர்பிளே வரை நின்று பழைய லீக் ஆட்டங்களைப்போல சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினால், அந்த அணியின் வெற்றியும் உறுதி செய்யப்படும்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 7 லீக் ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் 2 முறையும் 2-வது பேட் செய்த அணிகள் 5 முறையும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”சிறந்த வீரராக இருக்கலாம்; ஆனால்” - சாடிய தோனி.. நீக்கப்பட்ட அந்த வீரர்.. தேடிய CSK ரசிகர்கள்!

rr vs srh
தொடர்ச்சியா 4 தோல்வி.. RR-ன் 16 வருட கோப்பை கனவு நிறைவேறுமா? SRH (or) CSK யாருக்கு 2-ம் இடம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com