INDvENG| முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி, அந்த நாட்டு அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா டங்க்லி 83 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. பிராத்திகா ராவல் (36), ஸ்மிருதி மந்தனா (28) ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (48), தீப்தி ஷர்மா (62) ஆகியோரின் நிலையான ஆட்டத்தால் இந்திய அணி 48.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 போட்டிகள் இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.