India U19 squad for Tour of England announced
வைபவ் சூர்யவன்ஷிபிசிசிஐ

இங்கிலாந்து சுற்றுப்பயணம் | U19 அணியில் இடம்பிடித்த வைபவ் சூரியவன்ஷி! சிஎஸ்கே வீரர்தான் கேப்டன்!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
Published on

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நடைபெறும் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. அந்த வகையில், U19 இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வணி முதற்கட்டமாக, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணிக்கு, ஆயுஷ் மாத்ரே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், பலரும் எதிர்பாராதவண்ணம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய U19 அணி வீரர்களின் விவரம்:

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & வி.கீ.), ஹர்வன்ஷ் சிங் (வி.கீ.), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா.

India U19 squad for Tour of England announced
இங்கிலாந்து சுற்றுப்பயணம்| இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com