இங்கிலாந்து சுற்றுப்பயணம்| இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ஜுன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி இரண்டு மூத்தவீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், யார் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தப்போகிறார்கள் என்ற குழப்பம் நீடித்துவருகிறது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணியானது, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட முதல்தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான இந்தியா ஏ அணி அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட் IN..
இந்தியா ஏ அணி மே 30 முதல் ஜுன் 13 வரையிலான 3 போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவிருக்கிறது. முதலிரண்டு போட்டிகளில் மட்டுமே இந்தியா ஏ அணி விளையாடும் என்றும், கடைசி போட்டியில் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாகவும், துருவ் ஜுரல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய வாய்ப்பாக கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், இஷான் கிஷன், ஹர்ஷ் துபே முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் 2வது போட்டிக்கு முன்னதாகவே இணைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா ஏ அணி - அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (வி.கீ), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (வி.கீ), மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கான்போஜ், ருதுராஜ் கெய்க்வாட், கலீல் அகமது, சர்பராஸ் கான், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே