‘நானே முதல்ல தோனி ரசிகன்டா.. அப்புறம்தான் இந்த கேப்டன் எல்லாம்’ வைரலாகும் ஹர்திக் பாண்டியா வீடியோ!

“நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன்” என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
MS Dhoni & Hardik Pandya
MS Dhoni & Hardik Pandya File Image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

MS Dhoni & Hardik Pandya
‘வலிமையான பேட்டிங்... சொதப்பலான ஃபீல்டிங்! ஆனாலும்...’ - சி.எஸ்.கே-வின் பாசிடிவ் நெகடிவ்ஸ் என்னென்ன?
MS Dhoni & Hardik Pandya
குஜராத் அணியில் பேட்டிங், பவுலிங்கில் இதுவரை ஜொலித்தவர்கள் யார்? புள்ளிவிவரம் கூறுவது என்ன?

இந்நிலையில், தோனி குறித்து ஹர்திக் பாண்டியா பேசும் வீடியோவொன்று, குஜராத் டைட்டன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

MS Dhoni & Hardik Pandya
MS Dhoni & Hardik Pandya Facebook

அதில் ஹர்திக் பாண்டியா, “நிறைய பேர் தோனி மிகவும் சீரியஸான நபர் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், நான் அவருடன் ஜாலியாக காமெடி சொல்லி விளையாடுவேன். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

அவருடன் நிறைய உரையாடியதைவிட, அவரை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். சகோதரரை போன்றவர். நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன். தோனியை போன்ற ஒருவரை வெறுக்க நீங்கள் பிசாசாகத்தான் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை பகிர்ந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியினர், அதன் கேப்ஷனில் ‘Captain. Leader. Legend. MSDhoni is an emotion’ என்று போட்டுள்ளது. இதுவும் நெட்டிசன்களிடையே வைரலாகிவருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com