குஜராத் அணியில் பேட்டிங், பவுலிங்கில் இதுவரை ஜொலித்தவர்கள் யார்? புள்ளிவிவரம் கூறுவது என்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியில் பேட்டிங், பவுலிங்கில் இதுவரை ஜொலித்தவர்கள் யார்? புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன? இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்!

குஜராத் அணி இன்று சென்னை அணியை எதிர்த்து, பிளே ஆஃப் குவாலிஃபையர் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன் குஜராத் அணியில் பேட்டிங், பவுலிங்கில் வலிமையாக திகழும் வீரர்கள் குறித்து புள்ளிவிவர ரீதியான ஒரு அலசலை இங்கு அறிவோம்...

பேட்டிங்கில்...

குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் தூணாக இருக்கிறார் ஷுப்மன் கில். இத்தொடரில் அவர் எடுத்த ரன்னில் அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பாதியை கூட எடுக்கவில்லை என்பது இதற்கு உதாரணம். லீக் சுற்றில் 14 இன்னிங்ஸில் 2 சதம், 4 அரை சதம் என 680 ரன்களை குவித்துள்ளார் கில். இவரது ஸ்டிரைக் ரேட் 152 ஆக உள்ளது.

Gujarat Titans
Gujarat TitansShailendra Bhojak

குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 இன்னிங்சில் 2 அரை சதம் உட்பட 289 ரன் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 130. பாண்டியா இத்தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தினாலும் தனிப்பட்ட ஆட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை.

குஜராத் அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் 9 இன்னிங்சுகளில் 3 அரை தம் உட்பட 287 ரன் எடுத்துள்ளார். சக வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டையும் இவர் வைத்துள்ளார். தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு துணை நிற்கும் விஜய்சங்கர் பெரிதாக பேசப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தொடக்க வீரர் விருத்திமான் சாகா 14 இன்னிங்சில் ஒரு அரை சதம் உட்பட 287 ரன் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 129.86.

மத்திய வரிசையில் இறங்கும் டேவிட் மில்லர் 12 இன்னிங்சில் 255 ரன் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 148.

குஜராத் டைட்டன்சில் உள்ள மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சனும் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை நன்றாகவே பயன்படுத்தியுள்ளார். இவர் 6 இன்னிங்ஸ்களில் 2 அரை சதம் உட்பட 223 ரன் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 125. இது அவரது சக வீரர்களை விட சற்றே குறைவு

Gujarat Titans
Gujarat TitansKunal Patil, PTI

அடுத்து குஜராத்தின் பந்துவீச்சை பார்க்கலாம்.!

முகமது ஷமியும் ரஷீத் கானும் குஜராத் பவுலிங் படையின் முதுகெலும்பாக உள்ளனர். இருவரும் தலா 24 விக்கெட்டுகள் எடுத்து விக்கெட் அறுவடையில் முதல் 2 இடங்களில் இருந்து வருகின்றனர். இருவரும் ஓவருக்கு சராசரியாக 8 ரன்களுக்கு கீழ் தந்து எதிராளிகளுக்கு பேரிடராக இருந்து வருகின்றனர்.

சிஎஸ்கே முன்னாள் வீரரும், குஜராத் இந்நாள் வீரருமான மோகித் சர்மா 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர் ஓவருக்கு சராசரியாக 8.15 ரன் விட்டுத்தந்துள்ளார். சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது சராசரி 7.96. இந்த 4 பேரை தவிர யஷ் தயாள், ஜோஷ் லிட்டில், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் குறைவான ஓவர்களையே வீசியுள்ளனர்

புள்ளிவிவரங்கள் படி பார்த்தால் குஜராத் அணி ஷுப்மன் கில், முகமது ஷமி, ரஷீத் கான் ஆகிய 3 பேரை வெகுவாக சார்ந்துள்ளது தெரியவருகிறது!

Gujarat Titans
‘வலிமையான பேட்டிங்... சொதப்பலான ஃபீல்டிங்! ஆனாலும்...’ - சி.எஸ்.கே-வின் பாசிடிவ் நெகடிவ்ஸ் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com