‘கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பு இந்த ஐபிஎல் அணியில் விளையாட விரும்பினேன்’ -ஹர்பஜன் சிங்

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வுப் பெறுவதற்கு முன்னதாக கடைசி சில வருடங்கள் பஞ்சாப் அணியில் விளையாட விரும்பியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்கோப்புப் படம்

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வலதுகை சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் கடந்த 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருந்தார். இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ள ஹர்பஜன் சிங், மும்பை அணி 3 முறையும், சென்னை அணி கடந்த 2018-ம் ஆண்டில் கோப்பையை வென்றபோது அந்தந்த அணிகளில் இடம் பெற்றிருந்தார். ஐபிஎல்லில் மொத்தம் 163 போட்டிகளில் விளையாடி, 150 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய வீரராக திகழ்ந்தவர்.

ஹர்பஜன் சிங்
‘ரஜினிகாந்த் போல் செயல்படுவது கடினம்.. Pose-ஆவது காப்பியடிப்போமேனுதான்..’ - தோனி கலகல பதில்!

பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். எனினும், அவ்வப்போது ஐபிஎல் போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார் ஹர்பஜன் சிங். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐபிஎல் 16-வது சீசனின் வர்ணனையாளராக இருந்து வரும் அவரிடம், ‘மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது மகிழ்ச்சியாக இருந்தீர்களா? பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்பினீர்களா’ என #AskStar மூலம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக கடைசி 2-3 வருடங்கள் பஞ்சாப் அணிக்காக விளையாட விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசுகையில், “பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனது கிரிக்கெட் கேரியரில் கடைசி 2-3 ஆண்டுகள், ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடவும், எனது திறமைகளை அந்த அணியின் நலனுக்காக பயன்படுத்தவும் விரும்பினேன்.

ஹர்பஜன் சிங்
‘மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது... ஆனால், தோனி மட்டுமே இதனை செய்கிறார்’ - ஆகாஷ் சோப்ரா

இருப்பினும் மும்பை அணிக்காக நான் விளையாடிய 10 ஆண்டுகளும் மறக்க முடியாதவை. அந்த அணியில் நான் இருந்தபோது மூன்று கோப்பைகளை வென்றது மறக்க முடியாதது. முக்கியமாக என் வாழ்க்கையில் அந்த தருணங்களை என்னால் மறக்க முடியாது. அது மிகப் பெரிய அணி, அந்த அணியில் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடியபோது உற்சாகம் வேற லெவலில் இருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com