அடுத்த டார்கெட் ரிஷப்.. சாம்சனுக்குதான் வாய்ப்பு.. தீவிர முடிவில் கவுதம் கம்பீர்.. காரணம் இதுதான்!

கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகும் பட்சத்தில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பீர், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்
கம்பீர், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்எக்ஸ் தளம்

நடப்பு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒருபுறமிருக்க, மறுபுறம் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஓய்வு பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கும் கவுதம் கம்பீர் எடுக்கும் முடிவுகள்தான். அவர் பிசிசிஐக்கு தற்போதே சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. அதில், ‘இந்திய டி20 அணி என்பது ஒரு தனி அணியாக இருக்க வேண்டும். அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யாரும் ஒருநாள் அணியிலோ அல்லது டெஸ்ட் அணியிலோ இடம்பெறக் கூடாது என்பது அவரது கட்டுப்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும்.

அதன் காரணமாகத்தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற வேண்டி, சர்வதேச டி20 போட்டிகளில் கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஓய்வை அறிவித்து உள்ளனர். ஐபிஎல் தொடரின்போதே, கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியானது. அப்போதே அவர், டி20 அணியின் மூத்த வீரர்களை நீக்க வேண்டும் என்ற விஷயத்தை பிசிசிஐயிடம் அறிவுறுத்தி இருக்கிறார். அதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

கம்பீர், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்
Head Coach|அடுத்த ஜிம்பாப்வே தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண்; பிசிசிஐக்கு கண்டிஷன் போட்ட கவுதம் கம்பீர்!

அதன்பேரில்தான், விராட் மற்றும் ரோகித்துக்கு கடைசி வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதிலும் விராட்டை தேர்வு செய்யக்கூடாது என்ற நிலை வந்தபோது, ரோகித்தான் அவரை கட்டாயமாக அணிக்குள் கொண்டுவந்துள்ளார். அதனால், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இந்த நிலையில் எப்படியாவது டி20 உலகக் கோப்பையை வென்று அந்த மனநிறைவுடன் விடை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர்கள் போராடி அதைச் செய்து காட்டினர். மேலும் அதே மனநிறைவுடன் இனி நமக்கு டி20 அணியில் இடம் இல்லை என்பதை உணர்ந்து மூவரும் தாமாகவே ஓய்வை அறிவித்தனர். மாறாக, கவுதம் கம்பீர் அவர்களை அணியைவிட்டு நீக்கினால் அது கசப்பான அனுபவமாக இருந்திருக்கும். இதை உணர்ந்தே அவர்கள் ஓய்வை அறிவித்தது குறித்துத்தான் கிரிக்கெட் வல்லுநர்கள் பேசி வருகின்றனர்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தப் பட்டியலில் இருந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான ரிஷப் பண்ட்-டும் நீக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகும் பட்சத்தில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், அவர் சமீபகாலமாகவே சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இதையும் படிக்க: கங்கனா கன்னத்தில் அறைந்த விவகாரம்| சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்! எங்கு தெரியுமா?

கம்பீர், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்
T20 World Cup| இந்திய அணி அறிவிப்பு.. இடம்பிடித்த ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், 14 போட்டிகளில் 504 ரன்கள் விளாசியதுடன் ராஜஸ்தான் அணியை ப்ளே ஆஃபிற்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து அவர் டி20 உலகக்கோப்பை தொடரிலும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அப்போது பேசிய அவர் கம்பீர், ”ஒரு கிரிக்கெட் வீரரை ஐந்து நிமிடம் பார்த்தாலே அவர் எப்படி விளையாடுவார் என்று சொல்லிவிடுவேன். சஞ்சு சாம்சன் விளையாடுவதை இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பார்த்தேன். மிகச் சிறந்த பேட்டர் அவர். அதேபோல, இந்திய அணிக்காகவும் வரும் உலகக் கோப்பைத் தொடரில் அர்ப்பணிப்புடன் விளையாடுவார். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுவார் என்பதில் சந்தேகமேயில்லை. அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது அவருக்கு ஒன்றும் புதிது கிடையாது. இதற்கு முன்னரே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியிருக்கிறார். பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்படுவார்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் களமிறக்கப்படாமலேயே இந்திய அணி கோப்பையை வென்றது. எல்லாப் போட்டிகளிலும் ரிஷப் பண்ட்டுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் அவரும் பல போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படாததையும், ரிஷப் பண்ட் சோபிக்கத் தவறியதையும் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனால், அவரது தலைமைக்குப் பிறகு கட்டாயம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். அத்துடன், ரிஷப் பண்ட் வாய்ப்பு மறுக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: US Election|”நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன்” - ட்ரம்பிடம் தடுமாறியது குறித்து பைடன் சொன்ன விளக்கம்!

கம்பீர், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்
கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆவதை எதிர்க்கிறாரா கங்குலி? சர்ச்சை பதிவும், பின்னணியும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com