கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆவதை எதிர்க்கிறாரா கங்குலி? சர்ச்சை பதிவும், பின்னணியும்!

“தலைமை பயிற்சியாளர் பதவி என்பது வீரர்களின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுவது, அதனால் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்” என்று சவுரவ் கங்குலி பதிவிட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
ganguly - gambhir
ganguly - gambhirweb

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் 2024 டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் கீழ், இந்தியா நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 2022 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிப்போட்டிவரையிலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிவரை வரையிலும் முன்னேறிய இந்திய அணி கோப்பை வெல்லாமல் வெறுங்கையோடு திரும்பியது.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பாக 2024 டி20 உலகக்கோப்பை தொடர் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த கோப்பையை இந்திய அணி வென்றுவிட்டாலும், ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிக்கப்போவதில்லை. அதனால் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடுதலை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

rahul Dravid | Ashwin
rahul Dravid | Ashwin

முதலில் ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃபிளெமிங், ஜஸ்டின் லாங்கர், விவிஎஸ் லக்சுமன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா முதலிய முன்னாள் ஜாம்பவான்களின் பெயர் தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்ததாகவும், பின்னர் அனைத்து வீரர்களும் விருப்பம் தெரிவிக்காததால் இறுதியில் கவுதம் கம்பீரை நோக்கி தலைமை பயிற்சியாளர் பதவி நகர்ந்துள்ளது.

ganguly - gambhir
”தட்டிக்கொடுக்க சொன்ன தோனி” To ”இஷாந்த்-கோலி இடையான ஸ்பெஷல் நட்பு” - 2024 IPL-ன் 5 ’வாவ்’ மொமண்ட்ஸ்!

கவுதம் கம்பீருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிசிசிஐ?

வெளிநாட்டு வீரர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததால், கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்து ஐபிஎல் கோப்பை வென்றுகொடுத்த கவுதம் கம்பீரே நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

gautam gambhir
gautam gambhir

முதலில் “பதவிக்கான உத்தரவாதம் கொடுத்தால் நான் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பேன்” என கவுதம் கம்பீர் சொன்னதாகவும், அதைத்தொடர்ந்து ஐபிஎல் கோப்பை இறுதிப்போட்டிவரை பொறுத்திருந்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

gautam gambhir
gautam gambhir

அதனைத்தொடர்ந்து எல்லோரும் நினைத்தது போலவே, 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தட்டிச்சென்றது.

சென்னையில் நடந்த இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஜெய் ஷா உள்ளிட்ட பிசிசிஐ உறுப்பினர்கள், கவுதம் கம்பீருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், டி20 உலகக்கோப்பைக்கு பிறகுதான் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.

ganguly - gambhir
”உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்பு” - அத்துமீறிய ரசிகருக்கு இப்படியொரு சோகமா? தோனி கொடுத்த நம்பிக்கை!

சவுரவ் கங்குலி பதிந்த சர்ச்சை பதிவு!

கவுதம் கம்பீர்தான் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற தகவல் கிட்டத்தட்ட 90% உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படும் வேளையில், சவுரவ் கங்குலி பதிவிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கங்குலி, “ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் தலைமை பயிற்சியாளர் என்பவர் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இடைவிடாத பயிற்சிகள்தான் எந்தவொரு நபரின் எதிர்காலத்தையும், களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வடிவமைக்கின்றன. எனவே பயிற்சியாளர் மற்றும் நிறுவனத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்...” என்று பதிவிட்டுள்ளார்.

சவுரவ் கங்குலியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், கம்பீரை தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுப்பதை கங்குலி விரும்பவில்லையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

அவரின் பதிவுக்கு ரிப்ளை செய்திருக்கும் ரசிகர் ஒருவர், “இந்த பதிவு கம்பீரை இந்திய பயிற்சியாளராக நியமிப்பதற்கு எதிரான ட்வீட் போல் தெரிகிறது, உங்களுடைய சொந்த ஊரான கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பை வென்றதற்கு கூட நீங்கள் வாழ்த்தி ஒரு ட்வீட் கூட போடவில்லை. நாங்கள் பார்த்து வளர்ந்த தாதா இப்படி இருந்ததில்லை” என்று கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு ரசிகர், “ஒரு பயிற்சியாளரால் வீரர்களை உருவாக்கவும் முடியும் அல்லது உடைக்கவும் முடியும் என்பது தாதாவுக்கு நன்றாக தெரியும். அப்படிதான் கிரெக் சேப்பல் இந்திய அணிக்கு நன்மையை விட அதிக தீங்கு செய்துவிட்டு சென்றார். மீண்டும் அப்படி நடந்துவிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதை சவுரவ் கங்குலி விரும்பவில்லை என்பது தெரிகிறது.

ganguly - gambhir
”MI-ம் ரோகித்தும் பிரிவார்கள்.. உடன் அவரும் வெளியேறுவார்”! 2025 ஐபிஎல் Retained பற்றி ஆகாஷ் சோப்ரா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com