தல தோனியின் ஆட்டத்தை கண்டு வியந்த ஃபிளெமிங்

மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்ப்பதற்கு, மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
தோனி
தோனிPT

நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதுகுறித்து புகழாரம் சூட்டியுள்ள அணியின் பயிற்சியாளர்
ஃபிளெமிங், “பேட்டிங் ஆர்டர் என்பதை தோனி விரும்பியதில்லை. எந்த இடத்தில் களமிறங்கினாலும் தனது பாணியில் ரன்களை சேர்ப்பார்” என்று கூறியுள்ளார்.

தோனி
MI-ல் தொடரும் ஹர்திக் மீதான விமர்சனங்கள்... எப்போதான் பாஸ் முடிவு வரும்!

மேலும் “தோனி நிறைய நேரம் விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால், அவருக்கு குறைந்த ஓவர்கள் மட்டுமே கிடைக்கிறது” என ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். கால் மூட்டு காயத்தில் இருந்து மீண்டும் தோனி அணிக்கு திரும்பிய நிலையில், அவரது ஆட்டம் சிறப்பாகவே உள்ளது என்றும்
ஃபிளெமிங் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com