அக்‌ஷய் காந்தி பாம்ப்
அக்‌ஷய் காந்தி பாம்ப்ட்விட்டர்

இந்தூர்| வேட்பு மனுவை திரும்பப் பெற்ற காங். வேட்பாளர்.. பாஜகவுக்குள் உடனே ஐக்கியமாக இதுதான் காரணம்!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட அக்ஷய் காந்தி பாம்ப், வேட்பு மனுவை திரும்பப் பெற்று பாஜகவுக்குள் நுழைந்தார். இதற்குக் காரணம் பழைய கொலை முயற்சி வழக்குத்தான் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம்ப் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவிலும் தன்னை இணைத்துக்கொண்டது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், திடீரென பாஜகவுக்குள் நுழையக் காரணம் பழைய கொலை முயற்சி வழக்குத்தான் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதிக்கு மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் ஷங்கர் லால்வானி களமிறக்கப்பட்டு உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், அக்‌ஷய் காந்தி பாம்ப் நிறுத்தப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற அக்‌ஷய் காந்தி பாம்ப், அடுத்த சில மணிநேரத்தில் பாஜகவிலும் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த ஷாக்கைத் தந்ததுடன், மத்தியப் பிரதேச அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: கான்பூர்| விவாகரத்து பெற்ற மகள்.. மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை.. ஆச்சர்யப்பட்ட ஊர்.. #ViralVideo

அக்‌ஷய் காந்தி பாம்ப்
வேட்பு மனு வாபஸ்.. பாஜகவில் ஐக்கியம்.. ஷாக் கொடுத்த காங். வேட்பாளர்.. இந்தூரிலும் பாஜக வெற்றி?

இந்த நிலையில், அக்‌ஷய் காந்தி பாம்ப் திடீரென பாஜகவில் ஐக்கியமாகக் காரணம் அவருடைய பழைய கொலை முயற்சி வழக்குத்தான் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அக்‌ஷய் காந்தி பாம்ப் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொலை முயற்சி வழக்கு குறித்து, தமது வேட்பு மனுவில் அக்‌ஷய் காந்தி மறைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனை கண்டுபிடித்த பாஜக, அதை பெரிய பிரச்னையாக மாற்றியது. தவிர, இந்த கொலை முயற்சி வழக்கில் மே 10ஆம் தேதி அக்‌ஷய் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதாவது, இந்தூர் தொகுதி வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் அக்‌ஷய் காந்தி ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில்தான் தேர்தலே வேண்டாம் என்று பாஜகவின் கூடாரத்தில் ஐக்கியமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: மணிப்பூர் பெண்கள் வீடியோ| வன்முறை கும்பலிடமே விட்டுச் சென்ற போலீஸ்.. சிபிஐ குற்றப்பத்திரிகை!

அக்‌ஷய் காந்தி பாம்ப்
இமாச்சல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்எல்ஏக்கள்.. பாஜகவில் ஐக்கியம்.. தேர்தலில் போட்டி?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com