சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி.. தோனிக்கு ஃபேர்வெல் நடத்த சரியான வாய்ப்பு - சாதிக்குமா சிஎஸ்கே படை!

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெற இருக்கிறது.
Dhoni
DhoniPT

நாடு, ஒரேநேரத்தில் இரண்டு பெரும் திருவிழாக்களைக் கொண்டாடி வருகிறது. ஒன்று, ஜனநாயகப் பெருவிழா. மற்றொன்று, ஐபிஎல் திருவிழா. இரண்டும் விழாக்களும் களைகட்டி வரும் இந்தச் சமயத்தில், ஏற்கெனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் இருப்பதுடன், கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோக, மறுபக்கம் கடந்த மார்ச் 22ஆம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஆரம்பம் முதலே விறுவிறுப்பையும் பரபரப்பையும் கூட்டி வருகிறது.

ஐபிஎல்
ஐபிஎல்file image

இந்த நிலையில், நடப்புத் தொடரின் 17வது சீசனுக்கான முதல்கட்ட அட்டவணை முதலில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் கொண்ட விவரம் வெளியானது. மக்களவைத் தேர்தல் காரணமாக முதல்கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகளுக்கான பட்டியலையும் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: ரோகித் Vs ஹர்திக்! அசிங்கப்படுவது யார்? சென்னை அணியை பார்த்தும் திருந்தாத மும்பைஅணி! யார் மீது தவறு?

Dhoni
மஞ்சள் பாய்ஸ் ரெடி... நீங்க ரெடியா..? நாளை தொடங்குகிறது ஐபிஎல் 2024!

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதுபோல், 2வது தகுதிச் சுற்றுப் போட்டியும் மே 24ஆம் தேதி சென்னையிலேயே நடைபெற உள்ளது. இதையடுத்து, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லின் இறுதிப்போட்டி மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். மேலும், பிசிசிஐ வெளியிட்டிருக்கும் இரண்டாவது அட்டவணையில், முதல் தகுதிச் சுற்று போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2012ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி முதல்முறையாக மகுடம் சூடியது. அதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சூப்பர் கிங்ஸ் 2வது முறையாகக் கோப்பையை வென்றிருந்தது.

இதையும் படிக்க: MIvsGT|மைதானத்திற்குள் திடீரென ஓடிவந்த நாய்..’ஹர்திக்’ ’ஹர்திக்’ கத்திய ரோகித் ஃபேன்ஸ்! வைரல் வீடியோ

Dhoni
டி10 போட்டிகளை நடத்தும் திட்டத்தில் பிசிசிஐ! அப்படினா ஐபிஎல்-ன் எதிர்காலம் - விவரம் என்ன?

சென்னையில் தான் இறுதிப்போட்டி நடைபெறப்போகிறது என்று கடந்த சில தினங்களாகவே பேசப்பட்டு வருகிறது. தோனி தன்னுடைய கேப்டன் பொறுப்பை இளம் வீரர் ருதுராஜிடம் கொடுத்துவிட்டதால் இந்த வருடம் அவருக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றால் தோனியை கோப்பையுடன் வழியனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

அதற்காக, 2021 ஆம் ஆண்டு தோனி பேசிய வீடியோ ஒன்றையும் வைரலாக பகிர்ந்தனர். அந்த வீடியோவில், “என்னுடிய கிரிக்கெட் வாழ்க்கையை எப்பொழுதும் திட்டமிட்டு செயல்படுவேன். இந்தியாவில் என்னுடைய கடைசி போட்டி சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அதனால், என்னுடைய இறுதி டி20 போட்டி சென்னையில் நடைபெறும் என்று நம்புகிறேன்” என்று தோனி தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருந்தார். அவர் சொன்னது போலவே நடைபெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னை அணி எப்படியும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும். கோப்பை வெல்லும் பட்சத்தில் அது சென்னையில் நடைபெற்றால் உண்மையில் அவருக்கான சிறந்த ஃபேர்வெல் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com