மஞ்சள் பாய்ஸ் ரெடி... நீங்க ரெடியா..? நாளை தொடங்குகிறது ஐபிஎல் 2024!

அனல் பறக்கும் தேர்தல் களத்திற்கு இடையே ஐபிஎல் திருவிழா நாளை தொடங்குகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது ஐபிஎல் 2024 திருவிழா. நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. தொடக்கப்போட்டி என்பதால் இரு அணிகளும் தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்த வெற்றி பெறுவதற்காக தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தும்.

ஐபிஎல் திருவிழா
IPL 2024 | டிக்கெட் கிடைக்காமல் திண்டாடும் ரசிகர்கள் - ஆன்லைன் கள்ளச்சந்தையா? CSK விளக்கம்!

இப்போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனையானதால், சேப்பாக்கம் மைதானம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக தொடக்க விழா நடத்தப்பட உள்ளது. இதில், ஏ.ஆர். ரகுமான், அக்ஷய் குமார், சோனு நிகம், டைகர் செரோஃப் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com