‘அதெப்பிடி திமிங்கலம்.. 4 ஓவரையும் மெய்டனா போடமுடியும்?’ ஃபெர்குசன் புதிய சாதனை.. NZ ஆறுதல் வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்களையும் மெய்டன்களாக வீசி ஃபெர்குசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஃபெர்குசன்
ஃபெர்குசன்pt web

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறுதல் வெற்றியுடன் நியூசிலாந்து அணி வெளியேறியது. தரோபா நகரில் நடந்த 39ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியாவுடன் மோதியது.

ஃபெர்குசன்
T20 WC: டிரென்ட் போல்டை வெற்றியோடு வழி அனுப்பி வைக்குமா நியூசிலாந்து...?

மழையின் காரணமாக தாமதத்துடன் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி, வலுவான நியூசிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பப்புவா நியூ கினியா அணி ஆல்-அவுட் ஆனது. யாரும் 20 ரன்களைத் தொடவில்லை. அதிலும் மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியில் ஃபெர்குசன் ரன்கள் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்களையும், போல்ட், சௌதீ, சோதி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஃபெர்குசன்
”கை உள்ள போற அளவு கொம்பு குத்தி கிழிச்சிருந்தது” பெண்ணை மாடு தாக்கிய நிகழ்வு; பதறவைக்கும் காட்சி

79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை கடந்தது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வெ 35 ரன்களை எடுத்திருந்தார். சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு விலகியது.

பப்புவா நியூ கினியா உடனான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் பெர்குசன் இதுவரை யாரும் செய்திடாத மிகவும் அரியதான சாதனையை படைத்துள்ளார். லாக்கி பெர்குசன் 4 ஓவர்களை மெய்டனாக வீசியதுடன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

மிகவும் அரிதான நிகழ்வான இதனை நிகழ்த்தியதன் மூலம் லாக்கி பெர்குசன் டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர் மெய்டன் ஓவரை வீசுவது இயல்பு என்ற போது, டி20 ஆட்டத்தில் இத்தகைய அரிதான சாதனை படைத்த பெர்குசனை சக வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஃபெர்குசன்
பாடப்புத்தகங்களில் இந்தியாவிற்கு பதில் பாரத்? NCERT இயக்குநர் கொடுத்த பதில் என்ன?

தொடர்ந்து 7 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் தோல்வி அடைந்து பப்புவா நியூ கினியா அணியும் மோசமான சாதனை படைத்துள்ளது. இதுவரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ச்சியக 7 முறை தோல்வியைத் தழுவியுள்ளனர். முதல் இடத்தில் பங்களாதேஷ் அணி 2007 முதல் 2012 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் தொடர்ச்சியாக 10 முறை தோல்வி அடைந்து முதலிடத்தில் உள்ளது.

ஃபெர்குசன்
’கவாச்’ அமைப்பு இருந்தும் மேற்குவங்க ரயில் விபத்து நடந்தது எப்படி? - தோல்வி எங்கு? எழும் கேள்விகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com