ஐஎல்டி20| பூரன், பிராவோ, பொல்லார்ட் ஆகியோரை ரீடெய்ன் செய்தது MI எமிரேட்ஸ்! மற்ற அணிகளில் யார், யார்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசனுக்கு ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
mi emirates
mi emiratescricinfo

ILT20 லீக் தொடரில் ஒரு அங்கமாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் குழுவின் அணியும், நடப்பு சாம்பியனுமான MI எமிரேட்ஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன், ஆல்ரவுண்டர்கள் டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட் ஆகியோரை ரீடெய்ன் செய்திருக்கிறது. ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷிம்ரன் ஹிட்மெயர், ஜேக் ஃப்ரேஸர் மெக்கர்க் உள்ளிட்ட பல வீரர்கள் தங்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

mi emirates
FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

கலைகட்டவிருக்கும் ILT20 சீசன் 3..

இன்டர்நேஷனல் லீக் டி20 (ஐஎல்டி20) தொடர் கடந்த 2 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 3 அணிகளை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வைத்திருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் MI எமிரேட்ஸ், ஷாரூக் கானின் அபு தாபி நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியின் துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. மேலும், வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் உபி வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்கள் கப்ரி குளோபல் இங்கே ஷார்ஜா வாரியர்ஸ் அணியை சொந்தப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி உரிமையாளர்களான அதானி ஸ்போர்ட்ஸ்லைன் இந்தத் தொடரில் கல்ஃப் ஜெயின்ட்ஸ் அணியை வைத்திருக்கிறார்கள். லான்ஸர் கேபிடல்ஸ் நிறுவனத்தின் டெஸர்ட் வைபர்ஸ் அணி தான் இந்திய தொடர்பு இல்லாத ஒரே அணி. அந்த அணியின் உரிமையாளர்கள் தான் புகழ்பெற்ற பிரீமியர் லீக் கிளப்பான மான்செஸ்டர் யுனைடட் அணியின் இணை உரிமையாளர்கள்.

இதுவரை ஐஎல்டி20 தொடரில் 2 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. 2023 ஃபைனலில் டெஸர்ட் வைபர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் சாம்பியன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றது கல்ஃப் ஜெயின்ட்ஸ். இந்த ஆண்டு நடந்த இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டியில் துபாய் கேப்பிடல்ஸ் அணியை 45 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ILT20 2023 Champions
ILT20 2023 Champions

ஐபிஎல் தொடரில் இருப்பதுபோல் இங்கே 4 வெளிநாட்டு வீரர்கள் தான் ஆடவேண்டும் என்று விதிகள் எதுவும் இல்லை. அதனால் எக்கச்சக்க உலக சூப்பர் ஸ்டார்கள் இந்தத் தொடரில் பங்கேற்கிறார்கள். ராபின் உத்தப்பா, யுசுஃப் பதான், அம்பாதி ராயுடு உள்ளிட்ட இந்திய வீரர்கள் கூட இந்தத் தொடரின் அங்கமாக இருந்தார்கள். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் போன்ற முன்னணி நாடுகளின் சூப்பர் ஸ்டார் வீரர்கள் நிறைந்திருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தத் தொடர். இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 11 முதல் பிப்ரவரி 9 வரை நடக்கிறது. அந்த சீசனுக்கான ஸ்குவாடுகளைக் கட்டமைக்கும் பணி இப்போது தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக ஒவ்வொரு அணியும் தாங்கள் ரீடெய்ன் செய்திருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

mi emirates
‘இதுக்கு ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்’! WI-க்கு மரண அடி கொடுத்து வென்ற ENG!

எந்த அணி யாரை தக்கவைக்கிறது?

அபு தாபி நைட் ரைடர்ஸ்: கேப்டன் சுனில் நரைனை ரீடெய்ன் செய்திருக்கும் நைட் ரைடர்ஸ், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரஸலையும் தக்கவைத்திருக்கிறது. அமெரிக்க வீரர்களான ஆண்ட்ரே கஸ் மற்றும் அலி கான் ஆகியோரும் ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார்கள். அலி கான் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு ஆடியிருக்கிறார். சரித் அசலென்கா, டேவிட் வில்லி போன்ற வீரர்கள் உள்பட மொத்தம் 11 வீரர்களை அடுத்த சீசனுக்கும் தொடர்கிறது ஷாரூக்கின் அணி.

sunil narine
sunil narine

டெசர்ட் வைபர்ஸ்: இந்த அணி வனிந்து ஹசரங்கா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், முகமது அமீர் ஆகியோரை தக்கவைத்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடிய மார்க் வுட் கூட ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார். 12 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த 2 ஆண்டுகளாக அணியின் கேப்டனாக இருந்த காலின் முன்றோ ரீடெய்ன் செய்யப்படவில்லை.

amir
amir

துபாய் கேபிடல்ஸ்: இப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆடிவரும் டேவிட் வார்னர் (கேப்டன்), ஜேக் ஃப்ரேஸர் மெக்கர்க் ஆகியோரும், முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் வீரர்களான ரோவ்மன் பவல், சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் துபாய் கேபிடல்ஸால் ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார்கள். தஷுன் ஷனகா, துஷமந்தா சமீரா உள்பட 11 வீரர்களை தக்கவைத்திருக்கிறது துபாய் கேபிடல்ஸ்.

கல்ஃப் ஜெயின்ட்ஸ்: மிகப் பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே கடந்த சீசன் ஃபைனலுக்கு முன்னேறியது இந்த அணி. அவர்கள் தங்கள் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் ஜோர்டன், ஷிம்ரன் ஹிட்மெயர் போன்றவர்களை ரீடெய்ன் செய்திருக்கிறார்கள். அசோஷியேட் அணி வீரர்களை அதிகம் நம்பும் இந்த அணி மொத்தம் 13 வீரர்களை தக்கவைத்திருக்கிறது.

MI எமிரேட்ஸ்: நிகோலஸ் பூரன், டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ஃபிளெட்சர், குசல் பெரேரா, அகீல் ஹொசைன் என பெரும் நட்சத்திர பட்டாளத்தையே ரீடெய்ன் செய்திருக்கிறது MI எமிரேட்ஸ். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் வேகம் ஃபசல்ஹக் ஃபரூக்கி, யாழ்ப்பான ஸ்பின்னர் விஜயகாந்த் வியாஸ்காந்த் உள்பட மொத்தம் 14 பேரை அடுத்த ஆண்டும் தொடரப்போகிறது நடப்பு சாம்பியன்.

mi emirates
mi emirates

ஷார்ஜா வாரியர்ஸ்: கடந்த 2 சீசன்களிலுமே பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட ஷார்ஜா வாரியர்ஸ் இம்முறை மொத்தம் 8 வீரர்களை மட்டுமே ரீடெய்ன் செய்திருக்கிறது. தில்ஷன் மதுஷன்கா, குசல் மெண்டிஸ், டாம் கோலர் கேட்மோர் போன்றவர்கள் அந்த அணியில் தொடர்கிறார்கள். கிறிஸ் வோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ராஷித், டேனியல் சாம்ஸ் போன்ற ஸ்டார் பிளேயர்கள் அனைவரையுமே கழட்டி விட்டிருக்கிறது அந்த அணி

mi emirates
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com