csk
cskbcci

17, 15 வருடங்களுக்கு பிறகு RCB மற்றும் DC அணிகளிடம் தோல்வி.. என்ன சிஎஸ்கே இதெல்லாம்..?

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்துவதெல்லாம் பல ஐபிஎல் அணிகளின் கனவாக இருந்துவந்த நிலையில், தற்போது 15 வருடங்களுக்கு மேல் வெல்லாத அணிகள் கூட வெற்றிபெற்று சம்பவம் செய்துவருகின்றன.
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப்க்கும் தகுதிபெற்ற ஒரே அணியாக சிஎஸ்கே வலம் வருகிறது. இதில் 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியாக முத்திரை பதித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பங்கேற்ற முதல் 10 ஐபிஎல் சீசனிலும் பிளே ஆஃப்க்கு முன்னேறிய ஒரே அணியாக தனித்துவமான சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வென்று காட்டிய சிஎஸ்கே
வென்று காட்டிய சிஎஸ்கே

இப்படி பல்வேறு சாதனைகளை கொண்டிருந்த சிஎஸ்கே அணி, தோனி கேப்டன்சியிலிருந்து விலகியபிறகு சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறிவருகிறது.

2023 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் கோப்பை வென்றதற்குப்பிறகு, 2024 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் சுமாரான ஆட்டத்தை கொண்டிருந்தது சிஎஸ்கே. அது நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் மாறும், சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்குதிரும்பும் என்று காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ள சென்னை அணி, இதற்குமுன் தோற்காத அணிக்கு எதிராகவெல்லாம் தோற்று படுமோசமாக செயல்பட்டுவருகிறது.

csk
டி20 போட்டியா? டெஸ்ட்டா? மறந்துபோன CSK பேட்ஸ்மேன்கள்! உடைகிறதா தோனி கட்டமைத்த கோட்டை?

15 வருடத்திற்கு பின் டெல்லி அணியிடம் தோல்வி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது என்பது, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பை வெல்வது போன்ற கடினமான விசயமாகும். அப்படி ஒரு கோட்டையை சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி கட்டமைத்திருந்தது.

ஆனால் 2025 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை 17 வருடங்களாக வெல்லவே முடியாமல் தோல்வியையே சந்தித்துவந்த ஆர்சிபி அணி, 2008-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் வைத்து சிஎஸ்கேவை தோற்கடித்து சாதனை படைத்தது.

ருதுராஜ்
ருதுராஜ்

இந்த சூழலில் நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தோற்ற ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி, 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக 2010-ல் நடந்த போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் வென்றிருந்தது டெல்லி அணி.

டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயித்த 184 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்தது.

சிஎஸ்கே
சிஎஸ்கே

மோசமான கேப்டன்ஸி, சிறந்த பிளேயிங் லெவன் தேர்வுசெய்வதில் தோல்வி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் என அணி முழுவதும் குறைகளை கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி, விரைவில் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

csk
ஒரு தோல்வி CSK-ஐ மோசமான அணியாக மாற்றாது.. இதெல்லாம் நடந்தா நிச்சயம் PlayOff செல்லும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com