’’நாங்க MI அல்ல.. ருதுராஜை கேப்டனாக்கியது தோனிதான்” - மும்பை அணியை விமர்சித்த CSK CEO!

”தோனிக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் வந்திருப்பதால், நிச்சயம் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்” என சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ரோகித், ஹர்திக், காசி விஸ்வநாதன்
ரோகித், ஹர்திக், காசி விஸ்வநாதன்ட்விட்டர்

நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 5 முறை கோப்பைகளை வாங்கிய சென்னை அணியும், மும்பை அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியிருக்கிறது. இதில் நல்ல ரன் ரேட்டுடன் சென்னை அணி, 5-வது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், மும்பை அணியோ கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. இதனால் அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக, அவ்வணி தொடக்கம் முதலே விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதற்கு முக்கியக் காரணம், ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியதை அந்த அணி ரசிகர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எதிராக பல போட்டிகளில் குரல் கொடுத்தார்கள் என்பது உலகிற்கு வெட்டவெளிச்சமானது.

அதேநேரத்தில், சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனியின் ஆதரவால், நிகழ்ந்த இந்த மாற்றத்தை சென்னை அணி ரசிகர்களும் மனம் விரும்பி முழுவதுமாக ஏற்றுக்கொண்டனர். நல்ல ஆதரவு வழங்கினர்.

இதையும் படிக்க: "India Head Coachக்கு ஆஸ்திரேலிய வீரர்களா? புரளி கூறும் ஊடகங்கள்"- விளக்கமளித்த ஜெய் ஷா!

ரோகித், ஹர்திக், காசி விஸ்வநாதன்
MI தோல்வி | ரோகித், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களுடன் ஆலோசனை.. உரிமையாளர் சொன்ன சீக்ரெட்!

இந்த நிலையில் சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அவ்வணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடத் தொடங்கியபோதே, ’அடுத்த கேப்டனாக அவர் வருவார்’ எனப் பேசத் தொடங்கினோம்.

தோனி, காசி விஸ்வநாதன்
தோனி, காசி விஸ்வநாதன்ட்விட்டர்

அவரால், நிச்சயம் ஓர் அணியை வழிநடத்த முடியும் என்று நம்பிக்கை வைத்தோம். அதேபோல் ஃபிளெமிங் மற்றும் தோனி இருவருமே ருதுராஜ் உடன் ஏராளமான ஆலோசனைகளை நடத்தினர். கிரிக்கெட்டை ருதுராஜ் அணுகும் முறை, அவரின் சிந்தனைகள் அனைத்தும் கேப்டனுக்கு உரியதாக இருந்தது. இந்த சீசனில் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. நிச்சயம் சிஎஸ்கே அணியை அவர் சிறப்பாகவே வழிநடத்தியுள்ளார்.

இதையும் படிக்க: RR Vs SRH| IPL Finalக்குச் செல்வது யார்? கை ஓங்கியிருக்கும் RR.. கைப்பற்றத் துடிக்கும் SRH!

ரோகித், ஹர்திக், காசி விஸ்வநாதன்
16 வருடங்களுக்கு பிறகு முதல் சிஎஸ்கே கேப்டன்.. தோனியின் சாதனையை உடைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

சீனியர்கள் உதவியுடன், அவர் பேட்டிங்கில் எந்தப் பிரச்னையையும் சந்திக்கவில்லை. கேப்டன்சி அழுத்தம் அவருக்குக் கொஞ்சம்கூட வரவில்லை. அதனால் வரும்காலங்களில் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் கோப்பையை வெல்வார். தோனிக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் வந்திருப்பதால், நிச்சயம் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் தோனியின் நிலையை எட்டுவது எளிதல்ல. ருதுராஜ் கெய்க்வாட் மீது தோனி அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.

அதேபோல் சென்னை அணி ரசிகர்களும் அவரை ஏற்றுக்கொண்டது அவருக்கு உதவியாக அமைந்துள்ளது. ஏனென்றால், மற்ற அணிகள் கேப்டனை மாற்றியபோது எவ்வளவு பிரச்னைகள் வந்தது என்று தெரியும்.

கேப்டன்சியில் ரசிகர்களின் பங்கும் உள்ளது. அதேபோல் தோனியால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் எளிதாக ஏற்றுக்கொண்டார்கள். ருதுராஜ் கெய்க்வாடை சிஎஸ்கே உரிமையாளர்கள் கேப்டனாக தேர்வு செய்யவில்லை. இதுவரை கிரிக்கெட் தொடர்புடைய எந்த முடிவுகளிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தலையிட்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”சிறந்த வீரராக இருக்கலாம்; ஆனால்” - சாடிய தோனி.. நீக்கப்பட்ட அந்த வீரர்.. தேடிய CSK ரசிகர்கள்!

ரோகித், ஹர்திக், காசி விஸ்வநாதன்
”சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” - CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com