Shreyas - krunal - hardik
Shreyas - krunal - hardikweb

கோல்டன் டக்கில் வெளியேறிய ஹர்திக் - க்ருணால்.. hat-trick விக்கெட் கைப்பற்றி அசத்திய CSK பவுலர்!

சையத் முஷ்டாக் அலி தொடரில் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவரையும் முதல் பந்திலேயே 0 ரன்னில் வெளியேற்றி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் ஏலம்போன வீரர்.
Published on

2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடந்துவரும் தொடரில் 38 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த லீக் போட்டியில் குரூப் பி-ல் இருக்கும் பரோடா மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் க்ருணால் பாண்டியா தலைமையிலான பரோடா அணி வெற்றிபெற்றாலும், எதிரணியில் சிஎஸ்கே பவுலர் நிகழ்த்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.

Shreyas - krunal - hardik
”என்னையா ஏலம் எடுக்கல..” நேற்று 28 பந்தில் சதம்.. இன்று 36 பந்தில் சதம்! மிரளவைக்கும் குஜராத் வீரர்!

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய ஷ்ரேயாஸ் கோபால்!

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி அபினவ் மனோகரின் அரைசதத்தின் உதவியால் 169 ரன்கள் சேர்த்தது. அதற்கு பிறகு பேட்டிங் செய்த பரோடா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷஷ்வத் ராவத் அதிரடியாக விளையாடி 37 பந்தில் 63 ரன்கள் அடிக்க 10 ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது பரோடா அணி.

ஆனால் 11வது ஓவரை வீசவந்த ஷ்ரேயாஸ் கோபால் 10.1 ஓவரில் ராவத்தை 63 ரன்னில் வெளியேற்றியதுடன், அடுத்தடுத்தடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவரையும் 10.2, 10.3 ஓவரில் கோல்டன் டக்கில் வெளியேற்றி ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

போட்டியின் முடிவில் அடுத்தடுத்து வந்து சிறப்பாக விளையாடிய பரோடா அணி வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

Shreyas Gopal
Shreyas Gopal

கர்நாடகா வீரரான ஷ்ரேயாஸ் கோபாலை அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணி ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. ஷ்ரேயாஸ் கோபால் ஐபிஎல்லில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது மட்டுமில்லாமல், இரானி கோப்பையில் ஹாட்-ரிக் விக்கெட்டை கைப்பற்றி முதல் பவுலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லெக் ஸ்பின்னரான இவர் பந்தை ஃபிளைட் செய்து கூக்ளி மூலம் விக்கெட் எடுப்பதில் வல்லவர். இறுதியில் பேட்டிங் வந்து சில வெற்றி ஷாட்களை அடிக்கக்கூடிய ஹேண்டி பேட்டராகவும் இருக்கிறார். முதல்தர போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி 34.76ஆக இருப்பது கூடுதல் பலமாக சிஎஸ்கே அணிக்கு இருக்கப்போகிறது.

Shreyas - krunal - hardik
காயத்திற்கு பிறகு களம்கண்ட ஷிவம் துபே.. பறந்த 7 சிக்சர்கள்.. 36 பந்தில் 71 ரன்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com