15 மில்லியன் இன்ஸ்டா Followers.. RCB-MI அணிகளை பின்தள்ளி முதல் அணியாக CSK சாதனை!

சிஎஸ்கே அணி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் ஐபிஎல் அணியாக 15 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று அசத்தியுள்ளது.
csk
cskweb

ஐபிஎல் தொடர் என்றாலே அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளாக ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருந்துவருகின்றன. அதிலும் எந்த அணிக்கு ரசிகர்கள் அதிகம் என்ற போட்டியானது, சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கிடையே எப்போதும் கவனிக்கக்கூடிய மோதலாக இருக்கும். இந்த மூன்று அணிகள் எப்போது ஐபிஎல் போட்டியில் மோதினாலும் அவர்களின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக சொந்த அணிகளுக்கான ஆதரவை வழங்கிவருவது வழக்கம்.

சமீபத்தில் ரோகித் சர்மா கேப்டன்சி மாற்றம் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தியதால் அதிக ரசிகர்களை கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை விட பின் தங்கியது. அப்போது ஆர்சிபி ரசிகர்கள் அதனை அதிகமாக பகிர்ந்து, அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணி நாங்கள் தான் என்று செலப்ரேட் செய்தனர்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15மில்லியன் பின் தொடர்பவர்களை கடந்து, முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது சிஎஸ்கே அணி. தோனியின் மீதான அன்பும், தொடர்ந்து வீரர்களை அதிகமாக ஆதரிக்கும் சிஎஸ்கே அணியின் பாசிட்டிவ் வைப்ரேசனும் அதிகப்படியான ரசிகர்களை கைவசம் பெற்றுள்ளது.

csk
”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!

15 மில்லியன் இன்ஸ்டா Followers கொண்ட முதல் அணி CSK!

சமீபத்திய அப்டேட்டின் படி சிஎஸ்கே அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் Followers-ஐ அடைந்து, இந்த சாதனையை படைத்த முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்சிபி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன.

csk insta
csk insta

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்தளவு பின் தொடர்பவர்களுக்கு காரணமாக, 3 முறை ஐசிசி உலகக்கோப்பை வென்றவரும், 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றவருமான கேப்டன் எம்எஸ் தோனி இருக்கிறார். சென்னை ரசிகர்களால் “தல” என்று செல்லமாக அழைக்கப்படும் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக இருந்துவருகிறார்.

csk
“உங்கள் வீரர்கள் வேறு அணியில் சிறப்பாக ஆடுகிறார்கள்..” வீரர்களை ஆதரிக்காத RCB-ஐ சாடிய ஹர்பஜன் சிங்!

தோனிக்கு பதிலாக வேறுவீரரா?

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாஸ் வென்ற டெல்லி கேபிடஸ்ல் கேப்டன் ரிஷப் பண் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார்.

ms dhoni
ms dhoni

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டு வேறு வீரர் களமிறக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணியுடன் சென்றுள்ளது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, முஸ்தபிசுர் ரஹ்மான்.

csk
SL vs BAN: ‘இவங்க இன்னும் திருந்தல மாமா..’ மோசமான DRS ரிவியூ எடுத்த வங்கதேசம்! சிரிக்கும் ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com