ஐசிசியின் சிறந்த வீரர் பும்ரா.. சிறந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.. கொண்டாடும் ரசிகர்கள்

ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த ஆண் கிரிக்கெட்டர் விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெற்றுள்ளார். ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த பெண் கிரிக்கெட்டர் விருதை இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
பும்ரா, ஸ்மிருதி மந்தனா
பும்ரா, ஸ்மிருதி மந்தனாpt web

BOOM BOOM பும்ரா

ஐசிசி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த ஆண் கிரிக்கெட்டர் விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெற்றுள்ளார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பல போட்டிகளில் வெல்ல பும்ராவின் சிறப்பான ஃபார்ம் காரணமாக அமைந்தது.

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ராஎக்ஸ் தளம்

8 போட்டிகளில் 2 ஓவர்கள் மெய்டன்களுடன் 178 ரன்களை மட்டுமே கொடுத்து 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 8.26 ஆக உள்ள நிலையில், எகானமி 4.17 ஆக உள்ளது. இந்த குறைவான எகானமியின் மூலம், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மிகக்குறைந்த எகானமியில் பந்துவீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் சுனில் நரைன் 4.60 என்ற எகானமியில் பந்துவீசி இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பும்ரா தகர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பும்ரா 2024 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஐசிசி அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ரா, ஸ்மிருதி மந்தனா
”மொழி புரியாம ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன்; சேவாக் எனக்கு உறுதுணையா இருந்தார்” - நடராஜன் பேச்சு

ஸ்மிருதி மந்தனா

அதேபோல், ஐசிசியின் சிறந்த பெண் கிரிக்கெட்டர் விருதை இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் நடந்த தென்னாப்ரிக்காவிற்கு எதிரான தொடரில் தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது கிரிக்கெட் வாழ்வில் இந்த விருதினை முதன்முறையாக வெல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனாஎக்ஸ் தளம்

தென்னாப்ரிக்கா உடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இதில், மந்தனா மட்டும் 3 போட்டிகளில்ம் 343 ரன்களைக் குவித்திருந்தார்.

முதல் ஒருநாள் போட்டியில் 117 ரன்கள் சேர்த்ததுடன் ஆட்ட நாயகி விருதினையும் வென்றார். இரண்டாவது போட்டியில் 136 ரன்களையும், மூன்றாவது போட்டியில் 90 ரன்களை எடுத்ததோடு தொடர் நாயகி விருதினையும் வென்றிருந்தார். டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக ஆடிய ஷெஃபாலி வர்மாவுடன் இணைந்து 149 ரன்களைக் குவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில்தான், அவர் ஜூன் மாதத்திற்கான ஐசிசி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பும்ரா, ஸ்மிருதி மந்தனா
"கோவில்களில் கிடைக்கும் நன்கொடை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது" - உச்சநீதிமன்றம் கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com