\
பாகிஸ்தான்
பாகிஸ்தான்pt desk

மகளிர் T20 உலகக் கோப்பை தொடர் 2024: வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் வெற்றி!

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.
Published on

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பங்களாதேஷ் அணியுடன் ஸ்காட்லாந்து அணி மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 120 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணியால், ஆட்ட நேர முடிவில் 103 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

பங்களாதேஷ்
பங்களாதேஷ்pt desk

இதனால் பங்களாதேஷ் மகளிர் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கியது. மற்றொரு போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. யு பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான்
தென்கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகள் - 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்திய கோவை மாணவர்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com