வெண்கல பதக்கங்களை வென்று அசத்திய கோவை மாணவர்pt desk
விளையாட்டு
தென்கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகள் - 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்திய கோவை மாணவர்
பிலிப்பைன்சில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர் 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
செய்தியாளர்: பிரவீண்
பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் தென்கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில், கோவை சின்னதடாகத்தைச் சேர்ந்த பிரணவ் அருண்பிரசாத் இந்திய அணி சார்பில் ஜுனியர் பிரிவில் (17-19 வயது பிரிவு) கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீனா, ஹாங்காங், மங்கோலியா, சிங்கப்பூர், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகள்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
வெண்கல பதக்கங்களை வென்று அசத்திய கோவை மாணவர்pt desk
இந்தப் போட்டியில் பிரணவ் அருண்பிரசாத் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே மூன்றாம் இடம் பிடித்து மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார். இந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.