“தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்”- நம்பிக்கை கொடுக்கும் CSK பேட்டிங் கோச்; ரசிகர்கள் குஷி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் 2 ஆண்டுகள் ஆடுவார் என நம்புவதாக அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மைக்கேல் ஹஸ்ஸி, தோனி
மைக்கேல் ஹஸ்ஸி, தோனிpt web

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் என மூன்று அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிற்றன. எஞ்சியுள்ள ஒரு இடத்திற்கு சென்னை அல்லது பெங்களூர் என இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தகுதி பெறலாம். அதிலும் சென்னை அணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

தோனி
தோனி

புள்ளிப்பட்டியலில் தற்போது 14 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, நாளை பெங்களூரு அணியுடன் மோத உள்ளது. இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் என்றால் தோனி எனும் அளவிற்கு போட்டிக்கு போட்டி அவர் குறித்தான விஷயங்கள் பேசப்படுகின்றன. இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என ரசிகர்களே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி புதிதாக ஒன்றைக் கொடுத்துள்ளார்.

மைக்கேல் ஹஸ்ஸி, தோனி
3வது அணியாக Playoffs சென்ற SRH.. கடைசி இடம் யாருக்கு CSK or RCB? மழை குறுக்கிட்டால் என்னவாகும்?

தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டியளித்த அவர், “தோனிக்கு 42 வயதான போதிலும் இன்னும் சிறப்பாகவே விளையாடி வருகிறார். முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் போட்டிகளின்போது சமாளிக்க முடிகிறது. எனது தனிப்பட்ட பார்வையில் தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என நம்புகிறேன். எனினும் ஓய்வு பெறும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஆனால் அதை தற்போதைக்கு அவர் அறிவிக்க மாட்டார் என தோன்றுகிறது. ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அவர் முழு தகுதியுள்ளவராகும் வரை களத்தில் இருக்கவே தோனி விரும்புகிறார். கெயிக்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி நன்றாகவே ஆடி வருகிறது. கேப்டன்சியால் அவரது பேட்டிங் பாதிக்கப்படாமல் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

பேட்டிங் ஆர்டரில் சற்று முன்பாகவே அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள் என எனக்குத் தெரியும். முழங்கால் அறுவை சிகிச்சையின் காரணமாகவே அவர் பின்வரிசையில் வருகிறார். ஆனால் வந்ததில் இருந்தே பந்தை அடித்து ஆடுவதில் தோனியை விட சிறந்தவர்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஹஸ்ஸி, தோனி
”நீங்க அத செஞ்சா தான் என் காதல சொல்லுவேன்” - பெண் ரசிகை வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய காம்பீர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com