அஸ்வின்
அஸ்வின்ட்விட்டர்

”தோனியை சிக்ஸர் அடிக்கவிடாமல் தடுத்தது எப்படி?”.. சக வீரருக்கு அஷ்வின் கொடுத்த ஐடியா!

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

சிஎஸ்கே உடனான போட்டியில் கடைசி ஓவரில் தோனியை சிக்ஸர் அடிக்க விடாமல் தங்கள் அணி வீரர்கள் தடுத்ததற்கு தான் கொடுத்த ஐடியாதான் காரணமாக அமைந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி களத்தில் இருக்கும் சந்தீப் சர்மா பந்துவீச வந்தார். அந்த ஓவரில் முதலில் 2 சிக்ஸர்களை தோனி பறக்கவிட்டாலும், பின்பு சுதாரித்து பந்துவீசிய சந்தீப் சர்மா ரன்களை கட்டுப்படுத்தி ராஜஸ்தானுக்கு வெற்றியை வசமாக்கினார்.

MS Dhoni
MS DhoniTwitter

இது குறித்து ரவிசந்திரன் அஷ்வின் இப்போது பேசியுள்ளார் "அந்தப் போட்டியின் கடைசி ஓவரில் தோனி 2 சிக்ஸர்களை அடித்தார். வெறும் 20 ரன்களை கடைசி ஓவரில் தேவைப்படும்போது, தோனி போன்றொருவர் சிம்மசொப்பனமாக நிற்கும்போது உங்களால் வேறு என்ன செய்ய முடியும். அப்போது சந்தீப் இடம், இதுபோன்ற நேரங்களில் எதுமாதிரியான பந்து ரொம்ப ரிஸ்கானது என கேட்டேன். அதற்கு அவர் "ஸ்லோவர் லென்த் பால்" என சொன்னார். அப்போது நான் அந்தப் பந்தையே அவருக்கு வீசு என கூறினேன்.

sandeep sharma
sandeep sharma

மேலும் பேசிய அஷ்வின் "நான் சொன்னது மிகவும் ரிஸ்க்கான விஷயம்தான். ஆனால், வேலைக்கு ஆகும் என நம்பினேன். கடைசிக் கட்டங்களில் பேட்ஸ்மேன் நிச்சயம் அவ்வகையான பந்தை எதிர்பாத்திருக்கமாட்டார். எனவே, அந்த ஐடியாவை சந்தீப்பிடம் சொன்னேன்" என்றார் அவர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com