“ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டரை கண்டறிவது கடினம்” - ஆஷிஷ் நெஹ்ரா

குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் பதவிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டரை கண்டறிவது கடினமானது என அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா, ஆஷிஷ் நெஹ்ரா
ஹர்திக் பாண்ட்யா, ஆஷிஷ் நெஹ்ராfile

குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதையடுத்து தொடக்க வீரர் சுப்மன் கில் குஜராத் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா, ஆஷிஷ் நெஹ்ரா
”ஒழுக்கம், கடின உழைப்பு.. அதோடு விஸ்வாசமும் ரொம்ப முக்கியம்”-கேப்டன் பொறுப்பு குறித்து சுப்மன் கில்!
shubman gill
shubman gillpt desk

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அணி பயிற்சியாளர் நெஹ்ரா, பாண்டியா போன்ற திறமையும் அனுபவமும் வாய்ந்த வீரரை கண்டறிவது கடினம் என தெரிவித்தார்.

எனினும் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், கடந்த சில ஆண்டுகளாக தன்னை மேம்படுத்திக் கொண்டு வருவதாகவும் நெஹ்ரா தெரிவித்துள்ளார். வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் கில் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை அணி நிர்வாகம் வழங்கியுள்ளதாகவும் பயிற்சியாளர் நெஹ்ரா கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா, ஆஷிஷ் நெஹ்ரா
IPL-லில் களமிறங்கும் முதல் பழங்குடியின வீரர் ராபின் மின்ஸ் - யார் இவர்?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com