“அணியில் தேர்வாகாதது வலி கொடுத்தது… ரோகித் தான் என்னை தேற்றினார்”- சூரியகுமார் யாதவ்

“அணியில் தேர்வாகாதது வலி கொடுத்தது… ரோகித் தான் என்னை தேற்றினார்”- சூரியகுமார் யாதவ்
“அணியில் தேர்வாகாதது வலி கொடுத்தது… ரோகித் தான் என்னை தேற்றினார்”- சூரியகுமார் யாதவ்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை ஐபிஎல் ஆட்டத்தின் செயல்பாட்டை பொறுத்து  தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதாக சொல்லியிருந்தது பிசிசிஐ. அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 ஆட்டங்கள் விளையாடி 480 ரன்களை குவித்திருந்தார் சூரியகுமார் யாதவ். அதோடு டொமெஸ்டிக் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி இருந்தார் அவர். இருப்பினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடிக்காமல் போனது கிரிக்கெட் ரசிகர்களை கொதிப்படைய செய்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி இருந்தனர். 

இந்நிலையில் முதன்முறையாக இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் சூரியகுமார் யாதவ்…

“உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது வேதனையையும், வலியையும் கொடுத்தது. நான் மனதளவில் உடைந்து போயிருந்தேன். அப்போது நானும் கேப்டன் ரோகித் ஷர்மாவும் ஜிம்மில் இருந்தோம். அவர் என்னை பார்த்தார். உடனடியாக நான் என மன ஓட்டத்தை அவரிடம் வெளிப்படுத்தினேன். 

‘நீ அணிக்காக (மும்பை இந்தியன்ஸ்) நல்ல பங்களிப்பை கொடுக்கிறாய். உன் ஆட்டத்தில் கவனம் வைத்துக் கொள். உனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும். அதுவரை பொறுத்து இரு’ என சொன்னார். அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது” என சொல்கிறார் 30  வயதான சூரியகுமார் யாதவ். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com