\
Golden Boot award
Golden Boot awardStar players competing

உலகக்கோப்பை Golden Boot விருது.. போட்டிபோடும் நட்சத்திர வீரர்கள்: List-ல் உள்ள Top வீரர்கள் யார்?

ஃபிபா உலகக்கோப்பையில் தங்க காலணி விருதுக்கு போட்டி போடும் நட்சத்திர வீரர்கள்.
Published on

ஃபிபா உலகக்கோப்பை தொடர் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகளும் அரையிறுதிக்கு எட்டியுள்ளதால் கோப்பைக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.

இந்த தொடரில் பல்வேறு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என்றாலும் ஃபிபா உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்தவருக்கு வழங்கப்படும் தங்க காலணி (Golden Boot) , சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்க பந்து (Golden Ball) மற்றும் கோல்கீப்பருக்கு வழங்கப்படும் தங்க கையுறை (Golden Glove) ஆகியவற்றுக்கு முக்கிய வீரர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மிகமுக்கிய விருதாக தங்க காலணி விருதுக்கு போட்டியிடுபவர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

mbappe & messi
mbappe & messi

கிலியன் எம்பாப்பே :

இந்த விருதுக்கான போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 8 கோல்கள் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில் அவர் 8 கோல்கள் அடித்ததோடு 3 பேர் கோல் அடிக்க உதவியும் செய்துள்ளார். எம்பாப்பே கடந்த உலகக்கோப்பை தொடரில் தங்க காலணி விருதை ஏற்கனவே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோனல் மெஸ்ஸி :

இந்த பட்டியலில் அர்ஜென்டினாவில் ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். கிலியன் எம்பாப்பேக்கு இணையாக 8 கோல்களை அவர் அடித்திருந்தாலும், 2 பேருக்கு மட்டுமே கோல் அடித்த உதவி செய்துள்ளதால் இந்த பட்டியலில் மெஸ்ஸி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதுவரை மெஸ்ஸி தங்க காலணி விருதை வெல்லாத நிலையில், அதனை இந்த முறை வெல்ல மெஸ்ஸி தீவிரமாக முயல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

haaland & harry kane
haaland & harry kane

எர்லிங் ஹாலண்ட் :

இந்த தொடர் தொடங்கும்போது நார்வே அணி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. ஆனால், அந்த அணியை காலிறுதி வரை அழைத்துவந்ததில் அந்த அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட்க்கு பெரும் பங்கு உள்ளது. இந்த உலகக்கோப்பையில் அவர் 7 கோல்கள் அடித்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தாலும், அவரின் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், ஹாலண்ட் தங்க காலணி பந்தயத்தில் இருந்து விலகியுள்ளார்.

ஹரி கேன் :

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரான ஹரி கேன் 6 கோல்கள் அடித்து இந்த பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளார். ஹரி கேன் ஏற்கனவே 2018 உலகக்கோப்பையில் 6 கோல்கள் அடித்து தங்க காலணி விருதை வென்ற நிலையில், அதனை இரண்டாம் முறையாக வெல்ல தீவிரம் காட்டி வருகிறார்.

bellingham and dembele
bellingham and dembele

ஜூட் பெல்லிங்காம் :

தங்க காலணி விருதை எப்போதும் முன்கள வீரர்கள்தான் வெல்வததோடு, அதற்கான பந்தயத்திலும் அவர்கள்தான் முன்னிலையில் இருப்பார்கள். ஆனால் ஒரு நடுகள வீரராக இருந்துகொண்டு 6 கோல்கள் அடித்து இந்த பட்டியலில் 5-ம் இடத்தில் இருப்பதே ஜூட் பெல்லிங்காமின் மாபெரும் சாதனையாகும். இங்கிலாந்து அணியின் முதுகெலும்பாக திகழும் பெல்லிங்காம் அடுத்து வரும் போட்டியில் அதிக கோல் அடித்து தங்க காலணி விருதை வென்றால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உஸ்மானே டெம்பெலே :

பிரான்ஸ் அணியின் முக்கியமான வீரராக திகழும் உஸ்மானே டெம்பெலே இந்த தொடரில் 5 கோல்களை அடித்ததோடு, இரண்டு பேர் கோல் அடிக்க உதவியும் செய்து இந்த பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளார். இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், உஸ்மானே டெம்பெலே தங்க காலணி விருதை வெல்லவும் வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Golden Boot award
ODI போட்டி | 40 ஓவர்களாக குறைக்க ஐசிசி திட்டம்? ஆலோசனை கூறும் ஷுப்மன் கில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com