SRH vs DC: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு - ஆடும் லெவன் விவரம்

SRH vs DC: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு - ஆடும் லெவன் விவரம்
SRH vs DC: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு - ஆடும் லெவன் விவரம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

புள்ளிப்பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்திலும், ஹைதராபாத் கடைசி இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 19 முறை மோதியுள்ளன. அதில் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 11 முறை வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி அணிக்கு ஷ்ரேயஸ் ஐயர் வரவு பலம். ஹைதராபாத் அணியை கேப்டன் வில்லியம்சன் இந்த பிற்பாதி சீசனில் திறம்பட வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆடும் லெவன் விவரம்.. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

டேவிட் வார்னர், சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், கேதர் ஜாதவ், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.

டெல்லி கேப்பிடல்ஸ்!

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com